News June 18, 2024

விரல் ரேகை அளிப்போருக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

image

சிம்கார்டு, ரேஷன், வங்கி கணக்கு உள்ளிட்டவற்றுக்கு விரல் ரேகை சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி சார்பில் நாட்டு மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ள குறுந்தகவலில், பரிவர்த்தனைகளுக்கு விரல் ரேகையை பதிவிடும் முன்பு, அக்கருவியில் மெல்லிய கண்ணாடி தாள் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்து இல்லை என உறுதி செய்யும்படியும், விரல் ரேகை சேகரிப்பு ரசீதை பெறும்படியும் வலியுறுத்தியுள்ளது.

Similar News

News March 20, 2026

சென்னையில் இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச்.20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 20, 2026

‘ஜன நாயகன்’ ரிலீஸ்.. தேர்தல் அதிகாரியின் அப்டேட்!

image

ஆட்சேபனை காட்சிகள் அதிகம் இருந்தால் ‘ஜன நாயகன்’ வெளியீட்டை ஒத்திவைக்க முடியும் என Ex தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி தெரிவித்துள்ளார். அவசியப்பட்டால் பட காட்சிகளை நீக்கலாம் என்று கூறிய அவர், படத்தில் உள்ள கருத்தை பொறுத்தே அதனை முடிவு செய்வார்கள் என தெரிவித்தார். படத்தின் மறு ஆய்வு முடிவடைந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு படம் அனுப்பப்பட்டுள்ளது.

News March 20, 2026

மகளிர் உரிமை தொகை ₹1,500.. தேர்தல் வாக்குறுதி அளித்தார்

image

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலையொட்டி, 10 முக்கிய வாக்குறுதிகளை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ₹1,000-ஆக உள்ள மகளிர் உரிமைத் தொகை பொதுப்பிரிவு மகளிருக்கு ₹1,500 ஆகவும், SC/ST பிரிவு மகளிருக்கு ₹1,700 ஆகவும் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார். அதேபோல, வேலைதேடும் இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ₹1,500 தொடர்ந்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

error: Content is protected !!