News April 30, 2024
வங்கிகளின் வட்டி வசூல் குறித்து RBI அதிருப்தி

வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள், வட்டி வசூலிப்பதில் நியாயமற்ற நடைமுறைகளை பின்பற்றுவதாக ரிசர்வ் வங்கி அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் வரை, வட்டி வசூலிப்பதில் நியாயமற்ற நடைமுறைகளை கண்டறிந்த ரிசர்வ் வங்கி, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் இதனை திருத்திக் கொள்ளுமாறும், பெறப்பட்ட கூடுதல் கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்கே திருப்பி வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
Similar News
News January 27, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 27, 2026
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்

*இந்தப் பொல்லாத உலகில் எதுவுமே நிரந்தரமல்ல, உங்கள் பிரச்சனைகள் கூட இல்லை. *நீங்கள் கீழேயே பார்த்துக் கொண்டிருந்தால், வானவில்லைக் காண முடியாது. *உங்களை நீங்களே நம்ப வேண்டும். அதுதான் ரகசியம். *வரலாற்றுப் புத்தகங்களில் இருப்பதை விட கலைப் படைப்புகளிலேயே சரியான உண்மைகள் மற்றும் விவரங்கள் அதிகம் உள்ளன. *கனவுகள் எல்லாம் நினைவுகள் ஆகும், நிறைய காயங்களுக்கு பிறகு.
News January 27, 2026
பனிப்புயலில் சிக்கிய விமானம்… 7 பேர் பலி!

அமெரிக்காவில் வீசிவரும் பனிப்புயலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மெய்னே மாகாணத்தில் கடும் பனிப்புயலுக்கு இடையே பறந்த தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியது. ஓடுபாதையிலிருந்து கிளம்பிய அடுத்த 45 வினாடிகளில் ஏற்பட்ட இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஹாஸ்பிட்டலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


