News April 10, 2025

RBI விதிமுறையால் இனி நகைக் கடன் வாங்குவதில் சிரமம்!

image

RBI-ன் புதிய விதிகள் தங்க நகைக் கடன் வாங்குவதை சிரமமாக்கியுள்ளது. *கடனளிப்பவரின் Risk Management-ஐ ஆராய வேண்டும்.*முறையாக மதிப்பீடு செய்த பிறகே கடன் வழங்க வேண்டும்.*கடன் வாங்குபவர் அதைத் திருப்பி மீட்கும் தகுதி உள்ளவரா என்பதை செக் செய்ய வேண்டும்.*1 கிலோவுக்கு மேல் ஒரே நேரத்தில் அடகு வைக்க அனுமதிக்கக் கூடாது ஆகிய விதிகளால் தங்க நகைக் கடன் பெறுவதில் சிரமம் ஏற்படும் எனப் பலரும் புலம்பி வருகின்றனர்.

Similar News

News April 18, 2025

War தந்த வலி.. இந்த ஆண்டின் பெஸ்ட் போட்டோ இதுதான்!

image

இந்த போட்டோ உங்களை உலுக்காமல் இருக்காது. இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்த காசா சிறுவனின் போட்டோ தான் World Press Photo of the Year 2025 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனிய புகைப்படக் கலைஞர் சமர் அபு எலுஃப் எடுத்த போட்டோவில், 2 கைகளையும் இழந்து, முகத்தில் ‘எப்போது இந்த கொடுமை தீருமோ’ என நீங்காத சோகத்துடன் சிறுவன் அமர்ந்திருக்கிறான். உலகின் எதிர்காலத்தை போர்கள் இருட்டில் ஆழ்த்தி விடுகின்றன.

News April 18, 2025

Retire ஆகும் நேரத்தில் ரோஹித்… சேவாக் சொன்ன பாய்ண்ட்

image

ரோஹித் ஓய்வு பெறப்போகும் நேரத்தில், ரசிகர்களுக்கு மறக்கமுடியாத தருணங்களை கொடுக்க வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார். IPL 2025-ல் ரோஹித்தின் பெர்ஃபாமன்ஸ் சீரானதாக இல்லை எனவும், அவர் பெரிய இன்னிங்ஸ் ஆட தவறுகிறார் என்றும் சேவாக் கூறினார். நடப்பு IPL தொடரில் இதுவரை ரோஹித் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது வருத்தமான விஷயமே. Retire ஆவதற்கு முன், ரோஹித் மிரட்டலான ஒரு இன்னிங்ஸை ஆடுவாரா?

News April 18, 2025

முதுநிலை நீட் தேர்வு: மே 7 வரை விண்ணப்பிக்கலாம்

image

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுத, மே 7-ம் தேதி வரை <> இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 15-ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. ஜூலை 15-ம் தேதி முடிவுகளை வெளியிட தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. MS, MD, PG Dip. ஆகிய முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வாக இந்த முதுநிலை நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

error: Content is protected !!