News February 24, 2025
லோன் கட்டணத்தை கட் செய்யும் RBI

லோன் வாங்கியோருக்கு விரைவில் நல்ல செய்தி ஒன்றை RBI கொடுக்க இருக்கிறது. Floating வட்டியில் லோன் வாங்கியோர் Preclose அல்லது Foreclose செய்தால், தற்போது வரை அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனை ரத்து செய்யலாமா என்று கருத்து கேட்டு வங்கிகளுக்கு RBI கடிதம் எழுதியிருக்கிறது. மார்ச் 21ஆம் தேதிக்குள் வரும் கருத்துகளை வைத்து இந்த கட்டண ரத்து முடிவை RBI எடுக்கவுள்ளது.
Similar News
News February 25, 2025
இன்றைய (பிப். 25) நல்ல நேரம்

▶பிப்ரவரி- 25 ▶மாசி – 13 ▶கிழமை: செவ்வாய்
▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 07:30 PM – 08:30 PM
▶ராகு காலம்: 03:00 PM- 04:30 PM
▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM
▶குளிகை: 12:00 PM- 01:30 PM
▶திதி: திரயோதசி ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: திருவாதிரை
▶நட்சத்திரம் : உத்திராடம் மா 5.11
News February 25, 2025
தினமும் மோடியின் டிபன் என்ன தெரியுமா?

ஆண்டுக்கு 300 நாள்கள் டிபனுக்கு மக்கானாவைதான் சாப்பிடுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்கானா என்பது அல்லி மலரின் விதைகள் ஆகும். வட இந்திய மக்கள் இதனை அதிகளவில் சாப்பிடுகின்றனர். ஊட்டச்சத்து மிக்க இந்த உணவின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பட்ஜெட்டில் மக்கானா வாரியம் அமைப்பது குறித்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தினமும் காலையில் அதைதான் உட்கொள்வதாக மோடியே தற்போது பேசியிருக்கிறார்.
News February 25, 2025
தமிழர்களை பாஜக எதிரியாக நினைக்கிறது: காங்கிரஸ்

வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதாவுக்கு TN CONG தலைவர் செல்வப்பெருந்தகை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சட்ட திருத்தம் மூலம் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலின் பெயரை, மெட்ராஸ் பார் கவுன்சில் என பெயர் மாற்ற மத்திய அரசு துடிப்பதாகவும் விமர்சித்துள்ளார். தமிழ், தமிழர்கள் என்றாலே பாஜக வெறுப்பை காட்டுவதாகவும், இதற்கெல்லாம் மத்திய அரசு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும் எனவும் சாடியுள்ளார்.