News May 16, 2024
நிதி நிறுவனங்களுக்கு RBI அறிவுரை

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) கடன் வழங்க பின்பற்றும் அல்காரிதம் அடிப்படையிலான வழிமுறைகளை குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஜே.சுவாமிநாதன், “NBFCகள் பலம் & பலவீனங்களை விழிப்புடன் அணுகி, பயனாளியின் தரவை தொடர்ச்சியாக சரிபார்க்க வேண்டும். அத்துடன், விரைவாக கடன் வழங்கும் முறையை கவனமாகப் பின்பற்ற வேண்டும்” என்றார்.
Similar News
News August 8, 2025
பேசுவதை மட்டும் நிறுத்தாதீங்க

தம்பதியர் தங்களுக்குள் பேச்சுவார்த்தை பாதிக்காமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். இல்லையெனில், சிறு பிளவும் பெரிய பிரச்னைக்கு காரணமாகிவிடும். சிறிது அமைதியாக இருக்கலாம், பின் உடனே பேசிவிடுங்கள். துணைவர்மீது கோபம், அதிருப்தி மனதைப் பிசைந்து கொண்டிருந்தாலோ, அலுவலகப் பிரச்னையாக இருந்தாலோ, மனதில் இருப்பதை அவரிடம் பகிருங்கள். அவரையும் உங்கள் பிரச்னையில் உதவி செய்ய வையுங்கள்.
News August 8, 2025
இந்திய அணியில் RCB வீரருக்கு வாய்ப்பு?

ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பும்ரா, சிராஜ், கில், பண்ட், ராகுல் இடம்பெறமாட்டார்கள் என தகவல் வெளியாகிவுள்ளது. இந்நிலையில் க்ருணால் பாண்ட்யா அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. RCB அணிக்காக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாம். கடைசியாக 2021-ம் ஆண்டு இந்தியாவுக்காக விளையாடிய க்ருணால் சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்பு அணிக்கு திரும்புகிறார்.
News August 8, 2025
அதிமுக ஆப்ஷனை மூடிய விஜய்: 3 காரணங்கள்

அதிமுகவை இதுநாள் வரை மென்மையாக அணுகிவந்த விஜய், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணி ஆப்ஷனை விஜய் ஒதுக்கிவைத்ததற்கான 3 முக்கிய காரணங்கள். *EPS பலம்பெறுவது எதிர்காலத்தில் தவெக வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் *திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது பாஜக, நாதக வளர்ந்தது போல தவெகவும் வளரும் * நடுநிலை வாக்குகளை இழக்க நேரிடும் என்ற முன்னெச்சரிக்கை. விஜய்யின் முடிவு சரியா?