News April 5, 2026
RBI தங்கம் கொள்முதல் பாதியாக குறைந்தது!

தங்கம் கொள்முதலை RBI குறைத்துள்ளது. உலகத் தங்க கவுன்சிலின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் துருக்கி 8 டன், ரஷ்யா 6 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளன. 2025-ம் ஆண்டில் மாதத்திற்கு சராசரியாக 26 டன் தங்கம் கொள்முதல் செய்த RBI, இந்தாண்டின் முதல் 2 மாதங்களில் மாதத்திற்கு 12.5 டன் மட்டுமே வாங்கியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் போர் தொடங்கிய பிறகு தங்கம் விலை மந்தநிலையில் நீடித்து வருகிறது.
Similar News
News April 11, 2026
திருவிழா சாதியை பரப்புவதற்கு அல்ல: கோர்ட்

புதுக்கோட்டை கோயில் விழா ஒன்றின் அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களின் பெயருடன் அச்சிடக்கோரிய மனு மீது மதுரை HC முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளது. சாதி என்பது இல்லை; அது மக்களின் மனதில் மட்டுமே உள்ளது என கூறியுள்ளது. சமத்துவ சமுதாயத்தை மேம்படுத்தி சாதியை ஒழிப்பது மட்டுமே திருவிழாக்களின் நோக்கம் என்ற HC, திருவிழாக்கள் சாதியை பரப்புவதற்கான இடமாக மாறக்கூடாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
News April 11, 2026
ஹனிமூனுக்கு அனுப்பி வைப்பேன்: சீமான்

பிற கட்சிகளின் இலவச வாக்குறுதிகளை விமர்சித்த சீமான், தானும் வீட்டிற்கு 1 கிலோ தங்கம் கொடுப்பேன் என ஆவேசத்துடன் கூறினார். புதுமண தம்பதிகளை தேனிலவுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பேன் என்று அவர், இதையெல்லாம் கேட்க எவ்வளவு கேவலமாக உள்ளது எனவும் கேள்வி எழுப்பினார். அதேநேரம், கல்வி, மருத்துவம் & குடிநீரை மட்டுமே இலவசமாக தருவேன் என்றார்.