News October 25, 2025
ரத்தத்தில் கையெழுத்து வாங்கும் RB உதயகுமார்

அக்.30-ல் பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடைபெறவுள்ளது. இதில் EPS கலந்துகொள்கிறார். அவரை வரவேற்கும் விதமாக, ரத்தக் கையெழுத்து இயக்கத்தை RB உதயகுமார் தொடங்கியுள்ளார். முதலில் உதயகுமார், ரத்தத்தில் கைரேகை பதிவு செய்ததை தொடர்ந்து, நிர்வாகிகளும் பதிவு செய்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில், மதுரையில் தனது செல்வாக்கு நிலைத்து நிற்க, வீடியோ வாயிலான விமர்சனத்தையும் RB கையிலெடுத்துள்ளார்.
Similar News
News October 25, 2025
கவர்ச்சி காட்ட தயாராகும் கயாது

‘டிராகன்’ படத்தின் மூலம் மார்க்கெட்டில் டிமாண்ட் உள்ள நடிகையாக வலம் வந்தார் கயாது லோஹர். ஆனால், பார்ட்டி சர்ச்சைகளால் அவரது மார்க்கெட் டல் ஆனது. அடுத்து நடிக்கும் படங்களும் தள்ளிப்போனது. இதனால், கவர்ச்சி காட்ட தயாராகி வருகிறாராம். முதற்கட்டமாக கிளாமர் போட்டோஷூட், வீடியோ ஷூட் ரிலீஸ் செய்ய போகிறாராம். டாப் ஹீரோக்களுடன் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்க வேண்டும் என்பதே அவரது பிளானாம்.
News October 25, 2025
காந்திமதி நியமனம்: அன்புமணி ரியாக்ஷன்

பாமகவின் செயல் தலைவராக காந்திமதியை நியமித்தார் ராமதாஸ். இதுகுறித்து அன்புமணியிடம் கேட்டதற்கு, உள்கட்சி விவகாரம் குறித்து தன்னால் இப்போது பேச முடியாது என கோபத்துடன் பதிலளித்தார். அன்புமணியுடன் இருப்பவர்கள் பாமகவின் அணியே அல்ல, அது ஒரு குழு தான் என்று ராமதாஸ் நேற்று கூறியிருந்தார். இருதரப்பும் முரண்டு பிடித்துவரும் நிலையில், காந்திமதியின் நியமனம் கட்சியில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
News October 25, 2025
இதனால் இந்தியாவிற்கு அவப்பெயர்: BCCI

<<18100854>>ஆஸி., மகளிர்<<>> கிரிக்கெட் அணியினரிடம் அத்துமீறிய சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என BCCI கண்டித்துள்ளது. இந்த சம்பவம் இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும், உடனடியாக குற்றவாளியை கைது செய்த காவல்துறைக்கு நன்றியும் தெரிவித்துள்ளது. மகளிர் ODI WC-யில் விளையாட இந்தியா வந்துள்ள ஆஸி., அணியினர் ம.பி. ஹோட்டலில் தங்கியிருந்தனர். அதில் 2 வீராங்கனைகள் காஃபி குடிக்க வந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.


