News December 31, 2024

விடுமுறை நாள்களில் ரேஷன் கடைகள் இயங்கும்

image

ஜனவரி 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இந்த தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு வழங்கப்பட உள்ளது. பரிசுத்தொகுப்பு வழங்க ஏதுவாக விடுமுறை தினமான ஜன.3, 10 ஆகிய தேதிகளில் ரேஷன் கடைகள் இயங்கும். இந்த விடுமுறையை ஈடுகட்ட ஜன.15, பிப்.22ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Similar News

News November 3, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 508 ▶குறள்: தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். ▶பொருள்: நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.

News November 3, 2025

இந்தியா சாம்பியன்.. வரலாற்று தருணங்கள் PHOTOS

image

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணிக்கு அரசியல் பிரமுகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய மகளிர் அணி சாம்பியனாக உருவெடுத்த வரலாற்று தருணங்களை போட்டோக்களாக SWIPE செய்து பார்க்கவும்.

News November 3, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 3, ஐப்பசி 17 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: த்ரயோதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை

error: Content is protected !!