News March 26, 2025
29 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழக அரசு

ரேஷன் கடைகள் வரும் 29 ஆம் தேதி(சனிக்கிழமை) வழக்கம்போல் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறையாகும். வழக்கமாக மாதத்தின் கடைசி வேலை நாளில் ஒத்திசைவுப் பணிகள் நடைபெறும். இதனால் 29ஆம் தேதி பொருட்கள் வழங்கப்படுமா என்ற ஐயம் எழுந்த நிலையில், ரேஷன் கடைகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.
Similar News
News March 29, 2025
இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம்!

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்னும் சற்று நேரத்தில் நிகழ உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 2:20 மணிக்கு தொடங்கி மாலை 6:13 மணிக்கு முடிவடையும். ஆசியாவின் சில பகுதிகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், வட அமெரிக்காவில் தெரியும். வட அமெரிக்காவில் சூரிய உதயத்தின் போது நிகழும் கிரகணம் என்பதால், சிறந்த பார்வை அனுபவத்தைப் பெறலாம்.
News March 29, 2025
விஜய் பேச்சுக்கு தக் லைஃப் பதில் கொடுத்த துரை முருகன்

திமுக – தவெக இடையே தான் போட்டி என்று விஜய் பேசியது குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அப்டியா சொன்னாரு.. சரி.. சரி.. யார் யாருடன் சேர்ந்தாலும் கவலையில்லை, யார் யாருக்கு போட்டி என்பது பற்றியும் எங்களுக்கு கவலையில்லை. அவ்வளவு ஏன்? ADMK- BJP கூட்டணி வைத்தாலும் நாங்கள் கவலைப்பட போவதில்லை. எங்கள் கட்சிக்காக நாங்கள் உழைப்போம், ஜெயிப்போம் என தெரிவித்துள்ளார்.
News March 29, 2025
இன்று இரவு இந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது

இன்று இரவு 9.44 மணிக்கு சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. இதனால், மதியம் 1 – 2, இரவு 8 – 9 ஆகிய நேரங்களில் சமைக்கக்கூடாது, சாப்பிடக்கூடாது. சனிக்கிழமை சனி ஓரையில் சிவனுக்கு ஒற்றைப்படை எண்ணிக்கையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். சனிக்கிழமை பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு, கண் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு தேவையான மருத்துவ, உணவு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.