News September 30, 2024
ATM-களாக மாறும் ரேஷன் கடைகள்..! செம ப்ளான்

தமிழகத்தில், ரேஷன்கடைகளில் சிறு ATM சேவையை ஏற்படுத்த தமிழ்நாடு கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் ரூ.1,000 – ரூ.2,000 வரை ரேஷன் கடைகளிலேயே பணம் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கென வங்கி ஊழியர் ஒருவர் பணியமர்த்தப்படுவார். ATM வசதி இல்லாத (அ) பயன்படுத்த தெரியாத முதியோர் இதனால் பயனடைவர். இதில் பயோமெட்ரிக் முறையில் இயங்கக்கூடிய டிஜிட்டல் கருவி கோர் பேங்கிங் சேவைகளை வழங்கும்.
Similar News
News August 16, 2025
திருவாரூர் அர.திருவிடம் காலமானார்

திக – திமுகவினரால் பெரிதும் போற்றப்படும் திருவாரூர் அர.திருவிடம் காலமானார். பெரியாரின் தொண்டன், கருணாநிதி, ஸ்டாலினின் ஆதரவாளரான அவர், தேர்தல் நேரத்தில் திமுக வெற்றிக்காக தீவிர பரப்புரை மேற்கொண்டவர். ‘கலைஞரின் காலடிச் சுவடுகள்’, ‘திமுக பெற்ற வெற்றிகளும் வீரத்தழும்புகளும்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் அவரின் ‘திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை’ நூலை உதயநிதி வெளியிட்டிருந்தார்.
News August 16, 2025
யார் இந்த ஐ.பெரியசாமி?

‘MGR-ஐ வத்தலகுண்டுக்குள் வரவிட மாட்டேன்’ என 1973-ல் கூறி கவனம்பெற்று, திமுக ஒன்றிய தலைவரானவர் ஐ.பெரியசாமி. ஆத்தூர் MLA-வாக 1989-ல் முதல்முறையாக சட்டப்பேரவையில் நுழைந்தவர், பின்னர் மாவட்டச் செயலாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றார். 1996-ல் முதல்முறையாக அமைச்சராகப் பதவியேற்ற அவர், 2009 வரை மு.க.அழகிரியுடன் நெருக்கம் காட்டினார். அதன்பிறகு, தற்போது வரை ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக வலம் வருகிறார்.
News August 16, 2025
இன்று வாஜ்பாயின் நினைவு தினம்!

Ex PM அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம் இன்று. மக்கள் நலனே தனது அரசியலின் நோக்கமாகக் கொண்டு பணியாற்றியவர், பல நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா மூலம் கிராமங்களுக்கு சாலை, சர்வஜனிக் கல்வி திட்டம் மூலம் கல்வி, – அந்த்யோதயா அன்ன யோஜனா மூலம் குறைந்த விலையில் அரிசி, கோதுமை வழங்கும் திட்டம் என மக்களுக்காக பல திட்டங்களை நிறைவேற்றியவர்.