News August 19, 2024
செப்.5இல் ரேஷன் கடை ஊழியர்கள் “ஸ்டிரைக்”

10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு முழுவதும் செப். 5ஆம் தேதி ரேஷன் கடை ஊழியர்கள் “ஸ்டிரைக்”கில் ஈடுபடவுள்ளனர். கூட்டுறவு சங்கத்தின்கீழ் செயல்படும் 35,000 ரேஷன் கடைகளை சேர்ந்த ஊழியர்கள், அன்றைய தினம் பணிக்கு வர மாட்டார்கள் என, ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. செப். 5ஆம் தேதி வியாழக்கிழமை ஆகும். இதனால் அன்று மக்களால் ரேஷன் பொருள்களை வாங்க முடியாத நிலை ஏற்படும்.
Similar News
News March 7, 2026
அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் சிக்கலா?

சமீபத்தில் டெல்லி சென்ற EPS, தொகுதி பங்கீடு விவரங்களை அமித்ஷாவிடம் வழங்கியதாக சொல்லப்படுகிறது. அப்போது பாஜகவின் விருப்ப பட்டியலில் திருத்தங்கள் செய்யவேண்டும் என அமித்ஷா கூறினாராம். பின்னர், அன்புமணி தந்த 30 தொகுதிகள் அடங்கிய விருப்ப பட்டியலை EPS சரிபார்த்த போது, அதில் அதிமுகவினர் எதிர்பார்க்கும் மயிலம், மேட்டூர் உள்ளிட்ட சில தொகுதிகளும் இருப்பதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறதாம்.
News March 7, 2026
ராஜ்ய சபா துணை தலைவராகிறாரா தம்பிதுரை?

ராஜ்ய சபா துணை தலைவரான நாராயண் சிங்கின் பதவிக்காலம் ஏப்.9-ல் நிறைவடைகிறது. இந்நிலையில், புதிய துணை தலைவர் பதவியை ராஜ்ய சபா எம்பியாக தேர்வாகவுள்ள தம்பிதுரைக்கு பாஜக வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், லோக்சபாவில் துணை சபாநாயகராக பதவி வகித்த அனுபவம் அவருக்கு உண்டு. அதேநேரம், லோக் சபாவில் துணை சபாநாயகர் பதவியை நிரப்பாதது போல், ராஜ்ய சபாவிற்கும் அதே முடிவை மத்திய அரசு எடுக்கலாம்.
News March 7, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 7, மாசி 23 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சதுர்த்தி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்


