News August 8, 2025

முதியவர்களுக்காக வீடு தேடி செல்லும் ரேஷன் பொருள்கள்

image

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் ‘முதல் அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை’ வரும் 12-ந் தேதி CM ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் 20,42,657 முதியவர்களும், 1,27,797 மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 2-ம் சனி, ஞாயிறுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Similar News

News March 6, 2026

6G சேவை.. பின்லாந்துடன் இந்தியா ஒப்பந்தம்

image

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் இந்தியா வந்துள்ள நிலையில், இந்தியா-பின்லாந்து இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குடியேற்ற ஒத்துழைப்பு, சுற்றுச்சுழல், புள்ளிவிபரத் துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் PM மோடி முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம், இந்தியா-பின்லாந்து இடையே AI, 6ஜி தொலைத்தொடர்பு, எரிசக்தி, குவாண்டம் கம்ப்யூட்டிங் துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும்.

News March 6, 2026

₹6,769 கோடி வருவாய் ஈட்டிய பாஜக

image

2024-25 நிதியாண்டில் நன்கொடை மூலம் பாஜக ₹6,769 கோடி வருமானம் ஈட்டியதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம்(ADR) கூறியுள்ளது. 6 தேசிய கட்சிகள் சுமார் ₹7,960 கோடி பெற்ற நிலையில், அதில் பாஜகவிற்கு 85% நன்கொடை கிடைத்துள்ளது. காங்கிரஸ் ₹918 கோடி நன்கொடை பெற்றுள்ளது. வருவாயில் ₹3,774 கோடியை பாஜக செலவழித்துள்ளது. காங்கிரஸ் வருவாயை தவிர்த்து கூடுதலாக ₹193.66 கோடி என மொத்தம் ₹1111.94 கோடி செலவழித்துள்ளது.

News March 6, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 6, மாசி 22 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: த்ரிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்

error: Content is protected !!