News October 22, 2025
காதலர் தினத்தில் ‘ராட்சசன்’ காம்போ

‘ராட்சசன்’ மெகா வெற்றிக்கு பிறகு, அப்படத்தின் இயக்குநர் ராம்குமாரும், நடிகர் விஷ்ணு விஷாலும் இணைந்துள்ளதால், ‘இரண்டு வானம்’ படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. காதல் + அட்வெஞ்சர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை, 2026 பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். குறிப்பாக காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News January 14, 2026
பாஜக மூத்த தலைவர் மீது திருப்பரங்குன்றத்தில் புகார்

திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்த பாஜக முத்த தலைவர் எச் ராஜா மீது விசிக தலைவர் திருமாவளவனை விசிக பெயரையும் மிகவும் அவதூறாக ஒருமையில் பேசியதை தொடர்ந்து, விசிக திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமையில் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையரிடம் நேற்று புகார் மனு கொடுக்கப்பட்டது.
News January 14, 2026
பாஜகவுடன் விஜய் கூட்டணியா? முடிவை அறிவித்தார்

BJP தங்களின் கொள்கை எதிரி என்பதில் உறுதியாக இருப்பதாக தவெக செய்தித் தொடர்பாளர் லயோலா மணி உறுதிப்படுத்தியுள்ளார். திருவெற்றியூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் BJP வளர்வது பெரும் ஆபத்து, அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார். முன்னதாக BJP-வுடன் மென்மையான போக்கை கடைப்பிடிக்கும் தவெக, NDA கூட்டணியில் இணையும் என அமைச்சர் TM அன்பரசன் உள்ளிட்டோர் பேசி வந்தனர்.
News January 14, 2026
நிரந்தர கொரோனா போல் தாக்கும் மத்திய அரசு: ஸ்டாலின்

சூரியனைப் போற்றும் பொங்கல் நன்னாள், திமுகவிற்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிரந்தர கொரோனா வைரஸ் போல, மத்திய அரசு தாக்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால், அதை மீறியும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது எனக் கூறிய அவர், நிரந்தரத் தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகளை கடந்து, நிரந்தர மகிழ்ச்சியை மக்களுக்குத் தருவதுதான் திமுக அரசின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.


