News April 23, 2025
ரத்தன் டாடாவின் தன்னம்பிக்கை வரிகள்..!

▶ தோற்பது அல்ல தோல்வி. முயற்சியே எடுக்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய தோல்வி. ▶ வேகமாக நடக்க வேண்டும் என்றால் தனியாக நடந்து செல்லுங்கள். தொலைதூரம் நடக்க வேண்டும் என்றால் குழுவாக மட்டுமே பயணிக்க முடியும். ▶ தலைவர் என்பவர் உச்சியில் அமர்பவர் மட்டுமல்ல, மற்றவர்களைத் தங்களால் இயன்றதைச் செய்வதற்கு ஊக்குவிப்பவர். ▶ ஆழ்ந்த சிந்தனையும், கடின உழைப்பும் இல்லாமல் பெரிய விஷயங்கள் எதையும் அடைய முடியாது.
Similar News
News April 23, 2025
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஹட்சின் காலமானார்

மூத்த ஹாலிவுட் நடிகர் வில் ஹட்சின் (94) காலமானார். 1957-61-ல் படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் அவர் நடித்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டு நியூயார்க் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு 2 முறை திருமணங்கள் நடந்துள்ளன. இதில் முதல் மனைவிக்கு மட்டும் ஒரு மகள் உள்ளார். ஹட்சின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News April 23, 2025
பயங்கரவாத தாக்குதல்: உதவி எண்களை அறிவித்த TN அரசு

காஷ்மீர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ TN அரசு அவசர எண்களை அறிவித்துள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 011-24193300 (தொலைபேசி), 9289516712 (மொபைல், வாட்ஸ்அப்) எண்களில் தொடர்பு கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், புதுக்கோட்டை கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல் காஷ்மீர் சென்று ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்ள CM உத்தரவிட்டுள்ளார்.
News April 23, 2025
தங்கர் பச்சானின் குடும்பத்தில் ஒரு IAS

இயக்குநர் தங்கர் பச்சானின் அண்ணன் செல்வராசுவின் பேத்தியான சரண்யா சரவணன், UPSC தேர்வில் 125-வது இடம்பிடித்து IAS-ஆக தேர்வாகியுள்ளார். கடலூர் பத்திரக்கோட்டையைச் சேர்ந்த சரண்யா, 4-வது முறையாக தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்கு தங்கர் பச்சான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், ஒரு IAS-ஆக 2 பேருடைய கண்ணீரையாவது துடைப்பேன் என நம்புவதாகவும் சரண்யா கூறியுள்ளார்.