News March 17, 2025
டூத் பேஸ்டுக்கு பதில் எலி பேஸ்ட்.. பறிபோன உயிர்

பல நேரங்களில் சிறிய அலட்சியம் கூட, பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடலாம். கேரளாவில் பாலக்காட்டில் 3 வயது சிறுமி நேகா ரோஸ், காலையில் எழுந்ததும் பல் துலக்க பாத்ரூம் சென்றுள்ளாள். பேஸ்ட் என நினைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த எலி பேஸ்ட்டை எடுத்து பிரஷ் செய்தவுடன் மயங்கி விழுந்துள்ளாள். பெற்றோர் பதறியடித்து குழந்தையை ஹாஸ்பிடலில் சேர்த்தும் காப்பாற்ற முடியவில்லை. குழந்தைகள் விஷயத்தில் கவனமா இருங்க, ப்ளீஸ்!
Similar News
News March 18, 2025
வாடகை வீட்டுக்கு மாறும் ஷாருக்கான்… காரணம் இதோ!

மும்பையில் மன்னட் என்ற அரண்மனையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். அரண்மனை புதுப்பிக்கப்பட இருப்பதால் அங்கிருந்து தற்காலிகமாக வெளியேறும் அவரது குடும்பம், பாலி ஹில்லில் பட தயாரிப்பாளர் வாசு பாக்னானிக்கு சொந்தமான 2 அபார்ட்மெண்ட்களில் குடிபெயர உள்ளது. இதற்கான மாத வாடகை மட்டும் ரூ.24 லட்சமாம். ‘மன்னட்’ புனரமைப்பு சுமார் 3 ஆண்டுகள் நடைபெறும் என கூறப்படுகிறது.
News March 18, 2025
உம்ரான் மாலிக்கிற்கு பதில் இவரா?

காயம் காரணமாக KKR வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதில் குஜராத்தை சேர்ந்த சேத்தன் சக்காரியாவை கொல்கத்தா அணியில் இணைந்துள்ளது. 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அவர் 20 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் KKR மற்றும் RCB அணிகள் ஈடன் கார்டன்ஸில் மோதுகின்றன.
News March 18, 2025
செங்கோட்டையன், இபிஎஸ் விரிசலுக்கு இது காரணமா?

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆதலால் அங்கு அவரின் ஆதரவாளர்களே முக்கிய பொறுப்புகளில் இருந்தனர். ஆனால் அண்மையில் அவர்களை இபிஎஸ் மாற்றியதாகக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் செங்கோட்டையன் மகன் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதுவே விரிசலுக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.