News August 3, 2024
1,369 பேருக்கு எலிக்காய்ச்சல்

தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் 1,369 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் 1,046 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், 2022ஆம் ஆண்டில் 2,612, 2023ஆம் ஆண்டில் 3,002 பேர் பாதிக்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தாண்டில் எலிக்காய்ச்சல் கண்டயறிப்பட்ட 1,369 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.
Similar News
News November 20, 2025
சேலத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறாரா விஜய்?

கரூர் அசம்பாவிதத்திற்கு பின் விஜய் தனது பரப்புரையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். தற்போது அவர் சேலத்தில் இருந்து தனது பரப்புரையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்ட வருவதாகவும் கூறப்படுகிறது. எந்த இடத்தில் பொதுக்கூட்டம், போலீஸ் அனுமதி உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசித்து விரைவில் விஜய் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 20, 2025
அன்புமணியின் பேச்சு குழந்தைத்தனமானது: TRB ராஜா

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக அரசு பொய்சொல்வதாக அன்புமணி வைத்த குற்றச்சாட்டுக்கு TRB ராஜா பதில் அளித்துள்ளார். அதில் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உள்ள மொத்த தொகையும், முதல் நாளிலேயே முதலீட்டாளர்களால் செலவிடப்படும் என நினைப்பது குழந்தைத்தனமானது என தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் தரவுகளின்படி, வேகமாக வளர்த்து வரும் மாநிலமாக TN அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News November 20, 2025
தாயின் depression குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்குமா?

கர்ப்ப காலத்தில் பெண்கள் மன அழுத்தத்தில் இருந்தால் அது குழந்தைக்கு பாதிப்பை எற்படுத்தும் என்பது பலரும் அறிந்ததே. ஆனால், தாயின் மன அழுத்தத்தினால் குழந்தையின் பாலினத்திற்கும் தொடர்புள்ளதாக நியூயார்க்கில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி அதிக மன அழுத்தம் இருந்தால் பெண் குழந்தையும், அதுவே குறைவாக இருந்தா ஆண் குழந்தையும் பிறக்கும் என கூறப்படுகிறது.


