News March 17, 2024
குபேரன் ஆகப் போகும் ராசிகள்

நவ கிரகங்களில் இளையவராக கருதப்படும் புதன் பகவான், அறிவு மற்றும் ஞானத்தை அள்ளிக் கொடுக்கக் கூடியவர். இவர் ஏப்ரல் 2ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடைய இருக்கிறார். இதன் காரணமாக சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய ராசியினர் குபேர யோகத்தை பெற இருக்கின்றனர். தொழிலிலும், வேலை வாய்ப்பிலும் ஞானத்தை பயன்படுத்தி முன்னேறும் வாய்ப்பினை இந்த ராசியினருக்கு புதன் பகவான் ஏற்படுத்தி தரப் போகிறார்.
Similar News
News December 28, 2025
குழந்தைகளின் உயிருக்கு உலைவைக்கும் கிரீம் பிஸ்கட்

குழந்தைகள் விரும்பி உண்ணும் பொருளாக இருக்கிறது கிரீம் பிஸ்கட். அவர்களுக்கு இதை வாங்கித்தரும் பெற்றோருக்கு இதனால் ஏற்படும் அபாயத்தை பற்றி தெரிவதில்லை. இதிலுள்ள அளவுக்கு அதிகமான சர்க்கரை & மைதா, இளம் வயதிலேயே நீரிழிவு, இதய நோய்களை ஏற்படுத்துகிறதாம். இதில் சேர்க்கப்படும் நிறமிகள் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை பாதிப்பதால் இதனை அவர்களுக்கு கொடுக்க வேண்டாமென டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.
News December 28, 2025
சற்றுமுன்: செங்கோட்டையன் கொடுத்த அதிர்ச்சி

பல அதிமுக தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் சொல்லி வந்த நிலையில், இன்று Ex. MLA <<18692753>>சி.கிருஷ்ணன்<<>> அக்கட்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில் OPS, டிடிவி தினகரன் இணைவார்களா என செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் கேட்டனர். அதற்கு, பொங்கலுக்கு முன் இருவரும் இணைவார்கள், அதிமுக Ex அமைச்சர்கள் சிலரும் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் கூறியுள்ளார். இது அதிமுக தரப்புக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
News December 28, 2025
மீனவர்கள் கைதை தடுக்க CM ஸ்டாலின் கடிதம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுவிக்க கோரி CM ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைகளால், மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோல் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


