News November 22, 2024
காஷ்மீரில் மக்களை தாக்கிய ராஷ்டிரிய ரைஃபிள்ஸ்

ஜம்மு & காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது, ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பொதுமக்களை தாக்கியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 3, 2025
FLASH: மீள முடியாமல் தவிக்கும் இந்திய சந்தைகள்!

பங்குச்சந்தைகள் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இன்று வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 264 புள்ளிகள் சரிந்து 84,873 புள்ளிகளிலும், நிஃப்டி 96 புள்ளிகள் சரிந்து 25,935 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ், கடந்த 3 நாள்களில் மட்டும் 833 புள்ளிகளை இழந்துள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News December 3, 2025
ஒரே நாடு, ஒரே தேர்தல்: தேர்தல் கமிஷனரிடம் ஆலோசிக்க முடிவு

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா பற்றி ஆலோசிக்க ஞானேஷ் குமாருக்கு பார்லி., கூட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டத்திற்கு திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், இதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில், இவ்விவகாரத்தில் EC-க்கு வழங்க வேண்டிய அதிகாரத்தின் அளவு விவாதத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளதால் ஞானேஷ் குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News December 3, 2025
கூட்டணிக்கு Plan B-ஐ கையில் வைத்திருக்கிறதா காங்கிரஸ்?

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது காங்கிரஸ். இதனால் ஆளும் தரப்பும் ஆசுவாசமானது. ஆனால், திமுகவுக்கு தெரியாமல் தவெகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி சீக்ரெட்டாக காங்., ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அறிவிக்கப்படாத அணி ஒன்று தீவிரமாக இயங்கி வருகிறதாம். கேட்கும் சீட்டை கொடுக்கவில்லை எனில் மீண்டும் கூட்டணியில் குழப்பம் வெடிக்கலாம் என பேசப்படுகிறது.


