News December 7, 2024

விஜய் குடும்பத்துடன் படம் பார்த்த ரஷ்மிகா

image

நடிகை ரஷ்மிகா மந்தனா தான் கதாநாயகியாக நடித்த ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தை நடிகர் விஜய் தேவரகொண்டா குடும்பத்துடன் திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள பிரபல மாலில் தேவரகொண்டாவின் அம்மா மாதவி, சகோதரர் ஆனந்த் ஆகியோர் அவருடன் சேர்ந்து வந்ததைக் கவனித்த ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கூச்சல் போட்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன

Similar News

News April 7, 2026

BREAKING: மீண்டும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு?

image

ஈரானுக்கு டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்ததால் போர் பதற்றம் மீண்டும் உச்சத்துக்கு சென்றுள்ளது. இதனால் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் எழத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் LGP சிலிண்டர் தட்டுபாடு இல்லை எனவும், பெட்ரோல் பங்க்களும் வழக்கம் போல் இயங்கி வருவதாகவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. நேற்று மட்டும் 6,500 டன் வர்த்தக LPG விற்பனை செய்யப்பட்டுள்ளது.

News April 7, 2026

IPL: இன்றும் மழை பாதிப்பு?

image

IPL-ல் இன்று RR, MI அணிகள் இடையிலான போட்டி கவுஹாத்தியில் நடக்கிறது. இதில் மழையின் குறுக்கீடு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலை 6 மணி அளவில் 21% மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அது டாஸ் நேரத்தில் 6% ஆக குறையும் எனவும் கூறப்படுகிறது. ஆடுகளத்தின் ஈரப்பதம் காரணமாக போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால் ஓவர்கள் குறைக்கப்படும். ரத்தானால் நேற்று போல் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.

News April 7, 2026

புதுச்சேரியில் பிரசாரம் நிறைவு

image

ஏப்.9-ல் புதுச்சேரி, அசாம், கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், விதிகளின்படி ஓட்டுப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்திற்கு முன்பாக கட்சிகள் பிரசாரத்தை முடிக்க வேண்டும். அதன்படி, மாலை 5 மணியுடன் 3 மாநிலங்களிலும் பிரசாரம் நிறைவு பெற்றது. அத்துடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட கட்சியின் வெளியூர் நிர்வாகிகள் உள்ளிட்டோர் தொகுதியை விட்டு வெளியேற தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

error: Content is protected !!