News June 16, 2024

சம்பளத்தில் நயன், த்ரிஷாவை முந்திய ரஷ்மிகா

image

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளாக உள்ள நயன்தாரா, த்ரிஷா ஒரு படத்தில் நடிக்க ₹10 கோடி- ₹12 கோடி வரை சம்பளம் வாங்குவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், வாரிசு, சுல்தான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரஷ்மிகா, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் சிக்கந்தர் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவர் ₹13 கோடி சம்பளம் வாங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News March 3, 2026

ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ₹1 லட்சம் அறிவிப்பு!

image

பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், ₹1 லட்சம் தரும் ‘டெல்லி லட்சாதிபதி மகள்’ திட்டத்தை டெல்லி CM ரேகா குப்தா அறிவித்துள்ளார். பிறக்கும்போது ₹11,000, 1, 6, 9, 10 மற்றும் 12-ம் வகுப்பு ஆகியவற்றை முடிக்கும்போது தலா ₹5,000, டிகிரி முடிக்கும்போது ₹20,000 என வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அதனை வட்டியுடன் சேர்த்து ஒரு லட்சமாக அந்த பட்டதாரி பெண் பெறலாம். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

News March 3, 2026

ராசி பலன்கள் (03.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News March 3, 2026

2026-ல் ஹாட்ரிக் வெற்றியை ருசித்த சிறு பட்ஜெட் படங்கள்!

image

பராசக்தி, ஜனநாயகன் சென்சார் சர்ச்சையுடன் இந்தாண்டின் தமிழ் திரையுலக பயணம் தொடங்கியது. எனினும் கடந்த 2 மாதங்களில் பெரிய படங்களை விட சிறு பட்ஜெட் படங்கள் தான் வசூல் & விமர்சன ரீதியாக வெற்றியை ருசித்துள்ளன. வெறும் ₹10 கோடியில் உருவான ஜீவாவின் ’தலைவர் தம்பி தலைமையில்’ ₹40 கோடி வசூலை அள்ளியது. ’வித் லவ்’ ₹35 கோடியும், ‘தாய் கிழவி’ 3 நாள்களில் ₹22 கோடியும் வசூலித்து கோலிவுட்டையே அசர வைத்துள்ளன.

error: Content is protected !!