News January 11, 2025
ரஷ்மிகா மந்தனாவுக்கு கால் உடைந்தது..!

ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோ பலரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஜிம்மில் சென்று ஒர்க்அவுட் செய்த போது, அவரது காலில் பலமான அடிபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தனது காலில் அடிபட்டு கட்டுப்போடப்பட்ட ஃபோட்டோவை ரஷ்மிகா பகிர்ந்துள்ளார். மேலும், விரைவில் சிகாந்தர் மற்றும் குபேரா செட்டுக்குள் நுழைவேன். தாமதத்திற்காக எனது இயக்குநர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News September 15, 2025
நாய் கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

நாய் கடித்தவுடன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ➤நாய் கடித்த இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு கழுவுங்கள் ➤ஆல்கஹால் (அ) கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தம் செய்யணும் ➤கடிபட்ட இடத்தில் மிளகாய் பொடி, எண்ணெய் என எதையும் தடவ வேண்டாம் ➤எந்த ஒரு கிரீமையும் அப்ளை செய்யக்கூடாது ➤ரேபீஸ் ஊசியின் அனைத்து தவணைகளையும் செலுத்த வேண்டியது அவசியம். SHARE IT.
News September 15, 2025
கத்தாருக்காக இஸ்ரேலை எச்சரித்த டிரம்ப்

கத்தாரில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் USA-க்கு பங்கு இல்லை என டிரம்ப் விளக்கமளித்துள்ளார். கத்தாரும் அமெரிக்காவும் நல்ல நட்புறவை கொண்டிருப்பதாக கூறிய அவர், இஸ்ரேல் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்தார். அதோடு, கத்தாரும் ஹமாஸ் அமைப்பை கட்டுப்படுத்துவதற்கான வழியை கண்டறிய வேண்டும் எனவும் அவர் கூறினார்.
News September 15, 2025
பாமக தலைவர் அன்புமணி: ECI அங்கீகாரம்

பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம்(ECI) கடிதம் அனுப்பியுள்ளதாக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதற்கான கடிதத்தை காட்டினார். மேலும், கடந்த மாதம் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை அங்கீகரித்துள்ளதாகவும், மாம்பழம் சின்னமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.