News February 16, 2025
காயத்திலிருந்து முழுவதும் குணம்.. சூட்டிங்கில் ரஷ்மிகா

நடிகை ரஷ்மிகா, கடந்த மாதம் உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது காலில் காயமடைந்தார். இதையடுத்து சூட்டிங்கில் பங்கேற்காத அவர், சிகிச்சைக்கும், திரைப்பட நிகழ்ச்சிகளுக்கும் கால் நொண்டியபடி சென்று வந்தார். இந்நிலையில், கால் காயத்தில் இருந்து முழுவதும் குணமானதால், ஏஆர் முருகதாசின் சிக்கந்தர் பட சூட்டிங்கில் அவர் பங்கேற்றுள்ளார். இதுதொடர்பான படங்களை ரஷ்மிகா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
Similar News
News December 29, 2025
திண்டுக்கல்: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இ<
News December 29, 2025
BREAKING: பொங்கல் பரிசு ₹5,000.. வாக்குறுதி அளித்தார்

அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்கப்படும் என EPS உறுதியளித்துள்ளார். 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பை TN அரசு தற்போது வரை அறிவிக்காத நிலையில், EPS, நயினார் உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், புதிய தேர்தல் வாக்குறுதியாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ₹5,000 பொங்கலுக்கு வழங்கப்படும் என EPS கூறியுள்ளார்.
News December 29, 2025
அன்புமணி ஒரு RSS அடிமை: காந்திமதி

திமுக கைக்கூலி என தங்களை விமர்சிப்பவர்கள் RSS அடிமைகளாக உள்ளனர் என அன்புமணியை காந்திமதி கடுமையாக விமர்சித்துள்ளார். அதேநேரம், 25 MLA-க்களோடு சட்டப்பேரவையில் நுழைவோம் என்றும் அவர் சூளுரைத்துள்ளார். இதன்மூலம், ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இணையலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. ஏற்கெனவே, தன் பேச்சை கேட்காமல் பாஜகவுடன் அன்புமணி கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொண்டார் என ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார்.


