News May 27, 2024

ஹைதராபாத்தில் வீடு வாங்கிய ராஷி கன்னா

image

‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் பிஸியாக நடித்துவரும் அவர், ஹைதராபாத்தில் ₹8 கோடி மதிப்பில் வீடு ஒன்றை வாங்கி உள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்க ₹1.5 கோடியும், வெப் சீரிஸ்களில் நடிக்க ₹1-2 கோடியும் அவர் சம்பளமாக வாங்குவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News March 5, 2026

CM ஸ்டாலின் பொய் சொல்கிறார்: அன்புமணி

image

505 தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளைத்தான் திமுக நிறைவேற்றியுள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இது வெறும் 13% தான்; ஆனால் 98% நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின் பொய் சொல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர், துப்புரவு தொழிலாளர்கள் என அனைவரும் திமுகவிற்கு எதிராக வாக்களித்து தங்களுக்கு வெற்றியை கொடுப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.

News March 5, 2026

Swiggy, Zomato-வுக்கு போட்டியாக வந்தாச்சு Rapido-வின் Ownly!

image

பெங்களூருவில் Ownly செயலியின் மூலம் உணவு டெலிவரி மார்க்கெட்டில் Rapido கால்பதித்துள்ளது. ஹோட்டல் பில்லுடன் சேவை கட்டணமும் அதிகமாக இருப்பதால், மொத்த பில் அதிகமாக இருப்பதாக Zomato, Swiggy மீது தொடர் விமர்சனங்கள் உள்ளன. இந்த நிலையில்தான், Ownly ஆப் சேவை கட்டணமே இல்லாமல் அறிமுகமாகியுள்ளது. பெங்களூருவில் தங்களது மாடல் ஹிட்டானால், பிற நகரங்களுக்கும் சேவையை விரிவுப்படுத்தவும் Rapido திட்டமிட்டுள்ளதாம்.

News March 5, 2026

கடைசி நேரத்தில் மாறியது.. தமிழக அரசியலில் பரபரப்பு

image

பாமகவை தனது கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவை தேர்தலில் அன்புமணியும், ராஜ்யசபா தேர்தலில் சௌமியாவும் போட்டியிட திட்டமிடப்பட்டிருப்பதாக பேச்சு எழுந்தது. இன்று காலை வரை இதுதான் நிலைமை. ஆனால், கடைசி நேரத்தில் பெரிய ட்விஸ்ட்டாக அன்புமணி ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதேநேரம், மாற்று வேட்பாளராக செளமியா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

error: Content is protected !!