News February 26, 2025
பஸ்ஸில் பலாத்காரம்… பெண்ணுக்கு கொடுமை

மகாராஷ்டிரா, புனேவில் ஊருக்கு செல்வதற்காக 26 வயது பெண், மாநில பஸ் நிலையத்துக்கு அதிகாலை வந்துள்ளார். அவரிடம் ஒருவன், நீ போக வேண்டிய பஸ் வேறு பிளாட்பாரத்தில் நிற்கிறது எனக் கூறி, ஆளில்லா இடத்தில் நிறுத்தியிருந்த காலி பஸ்ஸை காட்டியுள்ளான். அதில் பெண் ஏறியவுடன் உள்ளே நுழைந்த அந்நபர், பலாத்காரம் செய்துவிட்டு தப்பிவிட்டான். இத்தனைக்கும் அங்கிருந்து 100 மீ தூரத்தில் தான் போலீஸ் ஸ்டேஷன் உள்ளதாம்.
Similar News
News February 27, 2025
விஜய்க்கு இன்னும் ஏன் Y பிரிவு பாதுகாப்பு வழங்கவில்லை?

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அறிவித்திருந்தாலும், தற்போது வரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை. Z+, Z, Y+, Y, X ஆகிய பிரிவு பாதுகாப்பு அறிவித்த பின்பு, மத்திய அரசின் Security Review Committee-இன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அதாவது, பாதுகாப்பு குறித்து அந்தந்த மாநில டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளோடு நடைபெற வேண்டிய ஆலோசனைக் கூட்டம் இன்னும் நடக்கவில்லை. இதனால், அவருக்கு இன்னும் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.
News February 27, 2025
CT தொடரில் இருந்து வெளியேறியது இங்கிலாந்து

நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து மூன்றாவது அணியாக இங்கிலாந்து வெளியேறியுள்ளது. ஏற்கெனவே குரூப் ஏ-வில் இருந்து வங்கதேசமும் பாகிஸ்தானும் வெளியேறியுள்ளன. இந்நிலையில், ஆஸ்திரேலியா & ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த இங்கிலாந்து, லீக் போட்டிகளிலேயே வெளியேறியுள்ளது. இதுவரை, இந்தியா & நியூசிலாந்து அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
News February 27, 2025
மகா சிவராத்திரி மகிமைகள் தெரியுமா?

மகா சிவராத்திரி மகிமைகள் குறித்து ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது, மகா சிவராத்திரியன்று கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது என்றும், இதனால் இன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத் தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி நகர்ந்திடும். பல யோகிகள், முனிவர்கள் இந்நாளை பயன்படுத்தி முக்தி அடைந்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.