News April 4, 2025
ரேப் புகார்… 25 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய நடிகர்!

இங்கிலாந்து பாப் பாடகி கேட்டி பெர்ரியின் முன்னாள் கணவரும், நகைச்சுவை நடிகருமான ரஸ்ஸல் பிராண்ட் மீது ரேப் புகார்கள் பதிவாகி இருப்பதாக லண்டன் போலீஸ் தெரிவித்துள்ளது. 1999-ல் ஒரு பெண்ணை ரேப் செய்ததாகவும், 2004-ல் ஒரு பெண்ணை வாய்வழி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மே 2-ல் கோர்ட்டில் ஆஜராகி அவர் விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 12, 2025
வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய பழங்கள்

வெயில் காலத்தில், சில பழங்களை மிதமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடுவது நல்லது. ஏனெனில், அவை உடலை அதிக வெப்பமாக்கலாம். அத்தி, பலா, அன்னாசி, பேரிச்சை மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் (முந்திரி, பிஸ்தா, பாதாம், வால்நட்) போன்ற பழங்கள் மற்றும் நட்ஸ்களை முடிந்த அளவு தவிர்ப்பது சிறந்தது. தர்பூசணி போன்ற நீர் சத்தை அதிகரிக்கும் பழங்களை தினந்தோறும் எடுத்துக்கொள்வது நல்லது.
News April 12, 2025
நெருக்கடியால் உருவான அதிமுக-பாஜக கூட்டணி: திருமா

அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என்று முன்பே எல்லோரும் யூகித்த ஒன்றுதான், அது இப்போது நிறைவேறியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். விஜய் அல்லது மற்ற அமைப்புகளுடன் இணைந்து அதிமுக கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்பதில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். மிக கவனமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். நெருக்கடியின் காரணமாக அதிமுக – பாஜகவுடன் இணையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திருமா தெரிவித்துள்ளார்.
News April 12, 2025
“தோனியை விமர்சிக்கலாம்.. அவமானப்படுத்தகூடாது”

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இர்பான் பதான் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில் ஒரு கிரிக்கெட் வீரரின் செயல்பாடுகளை விமர்சிக்க ரசிகர்களுக்கு உரிமை உண்டு ஆனால் எல்லை மீறக்கூடாது என தெரிவித்துள்ளார். தோனி ஒரு சாம்பியன் கிரிக்கெட்டர்.. அவரது தலைமையில் இந்தியா பல கோப்பைகளை வென்றுள்ளது. தோனி குறித்து தரம் தாழ்ந்த கருத்துகளை சமூக ஊடங்களில் தவிர்ப்பது நல்லது என இர்பான் கேட்டுக்கொண்டுள்ளார்.