News August 7, 2024
15 பேர் 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில், 15 பேர் 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர். இதில், விழுப்புரத்தை சேர்ந்த மாணவி திவ்யா முதலிடம் பிடித்துள்ளார். <
Similar News
News November 25, 2025
திரைப்பட விழாவில் கெத்து காட்டும் பாட்ஷா

‘ஐயா என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேரும் இருக்கு’ என்று பேசும் ரஜினியின் முகத்தில் தெரியும் மாஸே வேற லெவல் தான். அப்படிப்பட்ட ‘பாட்ஷா’ படம், கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. இவ்விழாவில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் கெளரவிக்கப்படவுள்ள நிலையில், இத்திரையிடலும் அதில் இடம்பெற்றுள்ளது. பாட்ஷாவில் உங்களுக்கு பிடித்த சீன் எது?
News November 25, 2025
நவம்பர் 25: வரலாற்றில் இன்று

*பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women).
*1839 – ஆந்திராவில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியால் கொரிங்கா நகரம் முற்றிலும் சேதமடைந்தது. 30,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*2016 – பிடல் காஸ்ட்ரோ நினைவுநாள்.
News November 25, 2025
மே.வங்கத்தில் 10 லட்சம் SIR விண்ணப்பங்கள் நிராகரிப்பு

தமிழகத்தை போல் மே.வங்கத்திலும் SIR பணிகள் நவ.4 முதல் நடைபெற்று வருகின்றன. இதுவரை 7.64 கோடி SIR விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 4.45 கோடி விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ECI தெரிவித்துள்ளது. இவற்றில் 10 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யவுள்ளதால், நிராகரிப்பு எண்ணிக்கை உயரவும் வாய்ப்புள்ளதாம்.


