News February 11, 2025
ரஞ்சிக் கோப்பை: தமிழ்நாடு தோல்வி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, விதர்பாவிடம் தோல்வி அடைந்தது. இன்று நடந்த இறுதிநாள் ஆட்டத்தில் 401 ரன் இலக்கை துரத்திய தமிழ்நாடு, 202 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 198 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பிரதோஷ் ரஞ்சன் பால்(53), சோனு யாதவ்(57) ஆகிய இருவர் மட்டுமே அரை சதம் கடந்தனர். இதையடுத்து, இந்த ஆண்டும் தமிழகத்தின் ரஞ்சி கனவு தகர்ந்தது.
Similar News
News March 6, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 629 ▶குறள்:
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
▶பொருள்: இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.
News March 6, 2026
CINEMA 360°: பிரதீப்பின் சம்பளம் ₹50 கோடி

*ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ‘Ordinary Man’ படத்தின் ஷூட்டிங் தொடங்கியது *சமுத்திரக்கனியின் ‘கார்மேனி செல்வம்’ ஏப்.3-ல் ரிலீசாகும் என அறிவிப்பு *செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் டீசர் வெளியானது *தனது அடுத்த படத்திற்கு பிரதீப் ரங்கநாதன் ₹50 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் *மலையாள இயக்குநர் தின்ஜித்திடம்(EKO) தனுஷ் கதை கேட்டுள்ளாராம் *ஜீவாவின் ‘TTT’ 50 நாள்களை கடந்தது
News March 6, 2026
SPORTS 360°: இன்று இந்தியா W – ஆஸி., W டெஸ்ட்

*இந்தியா, ஆஸி., மகளிர் அணிகள் இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி இன்று பெர்த்தில் தொடக்கம் *ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம் *U20 மகளிர் கால்பந்தில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் சுவீடன் கிளப் அணியை வீழ்த்தியது *ISL கால்பந்தில் ஈஸ்ட் பெங்கால், கோவா அணிகளுக்கு இடையிலான மோதல் கோலின்றி டிராவில் முடிந்தது *ஆப்கானிஸ்தான் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ரஷித் கான் நீக்கம்


