News February 2, 2025

ரஞ்சி டிராபி: ஸ்டார் வீரர்கள் எடுத்த ரன்கள்

image

டெல்லி அணியில் விளையாடிய கோலி 6, பண்ட் 1 ரன் மட்டுமே எடுத்தனர். சௌராஷ்டிராவில் விளையாடிய ஜடேஜா, 2 போட்டிகளில் 57 ரன்களையும், 12 விக்கெட்களையும் கைப்பற்றினார். மும்பை அணிக்காக களமிறங்கிய ரோஹித் ஷர்மா 3, 28 ரன்களை எடுத்தார். கர்நாடகா அணிக்காக ஆடிய ஷுப்மன் கில், முதல் போட்டியில் 4 ரன்களையும், 2ஆவது போட்டியில் 102 ரன்களையும் எடுத்தார். அதேபோல் கே.எல்.ராகுல் 26, 43 ரன்களை அடித்தார்.

Similar News

News March 19, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹2,160 குறைந்தது!

image

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் மிகப்பெரிய அளவில் குறைந்ததால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹270 குறைந்து ₹14,300-க்கும், சவரனுக்கு ₹2,160 குறைந்து ₹1,14,400-க்கும் செய்யப்படுகிறது. வரும் நாள்களில் மேலும் விலை குறையக்கூடும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News March 19, 2026

FLASH: பங்குச்சந்தைகள் கடும் சரிவு

image

பெரும் சரிவுடன் பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். சென்செக்ஸ் 1,786 புள்ளிகள் சரிந்து 74,942 புள்ளிகளிலும், நிஃப்டி 524 புள்ளிகள் சரிந்து 23,256 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. இதே நிலை நீடித்தால், இன்று இந்திய சந்தைகளில் சுமார் ₹10 லட்சம் கோடி வரை இழப்பு நேரிடும் எனப் பங்குச்சந்தை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். முதலீட்டாளர்களே கவனம்..!

News March 19, 2026

ECI-க்கு பெட்ரோலிய டீலர்கள் முக்கிய கோரிக்கை

image

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பணத்தை கொண்டு செல்வதில் பலரும் சிரமத்தைச் சந்திக்கின்றனர். இந்நிலையில், பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் உள்ள சட்டப்பூர்வமான பணத்தை பறிமுதல் செய்யாமல் அனுமதிக்க வேண்டும் என்று பெட்ரோலிய டீலர்கள் ECI-க்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஏனென்றால், 75% விற்பனை பணமாக நடைபெறுவதாகவும், எண்ணெய் நிறுவனங்களுக்கு பணமாக கொடுக்கவுள்ளதாலும் இக்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!