News March 17, 2024
ராணிப்பேட்டை: தேர்தல் புகார்களை தெரிவிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 04172-273190, 91,92,93 என்ற எண்களிலும் இலவச அழைப்பு எண்1800 425 7015 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான வளர்மதி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
ராணிப்பேட்டை: கஞ்சா விற்பனையில் ஒருவர் கைது

வாலாஜாவை அடுத்த அம்மூர் கூட்டு ரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த கோவிந்தா (30) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். மேலும், வாலாஜா புலித்தாங்கல் பகுதியில் குட்கா விற்ற சங்கர் (57) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 105 பாக்கெட் குட்காவையும் பறிமுதல் செய்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர்.
News November 25, 2025
ராணிப்பேட்டை: ரூ.2.50 கோடி முறைகேடு ஊழியர் கைது!

ராணிப்பேட்டை, சோளிங்கர் எஸ்பிஐ வங்கியில் அசோசியேட்டாக குரு ராகவன்28 என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஓராண்டு காலமாக செலவின கணக்கிலிருந்து ரூ.2.50 கோடி முறைகேடு செய்துள்ளார். இதனை கண்டுபிடித்த வங்கி மேலாளர் சௌதன்யா ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நேற்று நவ.24ம் தேதி புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கலையரசி வழக்கு பதிவு செய்து குரு ராகவனை கைது செய்தார்.
News November 25, 2025
ராணிப்பேட்டை: போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அமைந்துள்ள ரிஷஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று (நவ.24) நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இது ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் உதவியாளர் பணியாற்றிய சான்றிதழ்களை வழங்கினார்கள்.


