News March 18, 2024

ராணிப்பேட்டை: அத்துமீறிய பாதிரியார் மீது போக்சோ!

image

முத்துக்கடை பகுதியை சேர்ந்த பெர்லின் என்பவர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னுடைய மூத்த மகளிடம் பாதிரியார் ரகுராஜ்குமார் (54) என்பவர் பாலியல் அத்துமீறலில் கொடுத்துள்ளார். ஆதலால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஷாதின் நேற்று(மார்ச் 17) பாதிரியார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளார்.

Similar News

News December 23, 2025

ராணிப்பேட்டை: ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை!

image

ராணிப்பேட்டை, தக்கோலம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை மையத்தில் வீரராக ஜெய்பூரைச் சேர்ந்த சங்கர்லால் ஜாட் (30) பணியாற்றி வந்தார். இவர் நேற்று (டிச.22) சிஐஎஸ்எப் வளாகத்தில் உள்ள ஒரு அறையில், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தக்கோலம் போலீசார் வீரரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

News December 23, 2025

ராணிப்பேட்டை வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 1122 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பது நமது கடமை என்று மாவட்ட நிர்வாகம் செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி வருகின்ற டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News December 23, 2025

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்

image

செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் வழியாக காச்சிகுடா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று (டிச.22) ரயில்வே போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரயிலின் பொதுப்பெட்டியின் கழிவறை பகுதியில் பதுக்கி வைத்திருந்த 575 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தல் அரிசி மூட்டைகளை அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!