News March 28, 2025
ரம்ஜான் பண்டிகை: ஹரியானா அரசு அதிரடி உத்தரவு

ஹரியானா அரசின் விடுமுறைப் பட்டியலில் இருந்து ரம்ஜான் பண்டிகை நீக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் அம்மாநிலத்தில், நடப்பு ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்துள்ளார். இதற்கு அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. பாஜக ஆளும் மற்ற மாநிலங்களிலும் இந்த நடைமுறை அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News November 15, 2025
பாஜக எங்களை மிரட்டவில்லை: தவெக அருண்ராஜ்

கரூர் சம்பவத்தை வைத்து கூட்டணிக்காக தவெகவை பாஜக மிரட்டுவதாக எழுந்த கருத்துக்கு அக்கட்சியின் கொள்கைபரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் பதிலளித்துள்ளார். பாஜக கொள்கை எதிரி என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்த அவர், மிரட்டல் எதுவும் வரவில்லை என்றார். அதேபோல, மிரட்டப்படக்கூடிய நிலையிலும் தவெக இல்லை எனவும், பாஜகவுடன் சமரசம் செய்ய வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
News November 15, 2025
தொண்டை கரகரப்பு நீங்க இந்த கசாயம் குடிங்க!

மழைக்காலத்தில் ஏற்படும் தொண்டை கரகரப்பு & மார் சளி கட்டுதல் நீங்க, துளசி- ஓமவல்லி கசாயத்தை பருகும் படி சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். தேவையானவை: துளசி, ஓமவல்லி இலை, மாவிலை, தூதுவளை கீரை, சீரகம், மிளகு, தேன் செய்முறை: மேலே குறிப்பிட்ட இலைகளுடன், தூதுவளை கீரையை சிறிதாக நறுக்கி அதில், மிளகு, சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி தேன் கலந்து பருகலாம். SHARE IT.
News November 15, 2025
5 விக்கெட்கள்.. வரலாற்று சாதனை படைத்த பும்ரா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பும்ரா, 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம், SENA(South Africa, England, New Zealand, Australia) நாடுகளுக்கு எதிராக அதிக முறை(13 முறை, 80 இன்னிங்ஸ்) 5 விக்கெட்களை வீழ்த்திய ஆசிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். முன்னதாக, பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் 12 முறை (75 இன்னிங்ஸ்) 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்தது.


