News November 29, 2024
ஆட்டிப்படைக்கும் காற்றுமாசு.. கட்டுப்பாடு விதித்த SC

டெல்லியில் அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் தவிர, மற்ற சரக்கு வாகனங்களுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காற்றுமாசு காரணமாக டெல்லி மக்கள் வாழ்வதே மிக கடினமாக மாறியிருக்கிறது. இதுதொடர்பான வழக்கில், சி.என்.ஜி., எல்.என்.ஜி., பி.எஸ் 4 டீசல் லாரிகள், மின்சார வாகனங்கள் இயக்க அனுமதி அளித்துள்ள SC, டிச.2 வரை தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளை நீட்டிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 20, 2025
திருப்பனந்தாள் காசிமடத்தின் பீடாதிபதி காலமானார்

300 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட திருப்பனந்தாள் காசிமடத்தின் பீடாதிபதியான மகாமுனிவர் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் (95) முக்தி அடைந்தார். ‘கயிலை மாமுனிவர்’ என போற்றப்படும் இவர், ஆன்மிகம், சைவ சித்தாந்தம், தமிழ், கல்வி, சமூகப் பணியில் ஆற்றிய சேவை என்றும் அழியாது, தலைமுறைகளாக வாழ்வில் ஒளியாக நிலைத்திருக்கும். அவரது மறைவிற்கு அண்ணாமலை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News August 20, 2025
வைரத்தை இழந்துவிட்டோம், தங்கத்தை.. தவெக பேனர்

விஜயகாந்தை மானசீக குருவாக ஏற்றால் அவரது போட்டோவை தவெக பயன்படுத்த அனுமதிப்பதாக பிரேமலதா தெரிவித்திருந்தார். இந்நிலையில், ‘வைரத்தை இழந்துவிட்டோம், தங்கத்தை இழந்துவிட மாட்டோம்’ என்ற வாசகம் அடங்கிய பேனர் மதுரை தவெக மாநாட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, <<17459105>>அண்ணா, MGR<<>> போட்டோக்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், விஜயகாந்த் போட்டோ இடம்பெற்றது பேசுபொருளாகியுள்ளது.
News August 20, 2025
இதுவரை ரஜினி – கமல் இணைந்து நடித்த படங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி – கமல் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சாத்தியமானால் 46 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிப்பது தற்போதைய சூழலில் மரண மாஸாக இருக்கும். இதுவரை, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள் 16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும், தப்புத் தாளங்கள், தில்லு முல்லு, அலாவுதீனும் அற்புத விளக்கும் உள்ளிட்ட 21 படங்களில் நடித்துள்ளனர்.