News March 24, 2024
இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ராம்குமார்

ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீரர் ராம்குமார் ராமநாதன் முன்னேறியுள்ளார். சண்டிகரில் ஆடவருக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ராம்குமார், வியட்நாமின் ஹோங் லியுடன் மோதினார். தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய ராம்குமார் ஆட்டத்தின் முடிவில் ஹோங்கை 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று, இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்.
Similar News
News April 28, 2025
IPL-இல் இனி 94 போட்டிகள்

2028 IPL தொடரில் இருந்து 94 லீக் போட்டிகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக அதன் தலைவர் அருன் துமல் தெரிவித்துள்ளார். 8 IPL அணிகள் மட்டுமே இருந்தபோது, ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் 2 லீக் போட்டிகளில் விளையாடின. ஆனால், 10 அணிகள் வந்தபின், இந்த முறை பின்பற்றப்படாமல் 70 போட்டிகள் மட்டுமே நடத்தப்படுகிறது. இது நியாயமான நடைமுறை அல்ல என்று புகார் எழுந்ததால் மறு பரிசீலனை செய்யப்படவுள்ளது.
News April 28, 2025
முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

பிரபல தொழிலதிபர் வேலுவின் தாயார் கோமதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த செய்தியை கேட்ட உடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலுவின் இல்லத்திற்கு நேரில் சென்று கோமதியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின், சோகத்தில் மூழ்கியிருந்த குடும்பத்தினரை ஒவ்வொருவருக்கும் தனது ஆறுதலை தெரிவித்தார்.
News April 28, 2025
நேற்று வரை இலை இன்று களையா? சீறும் காளியம்மாள்!

நேற்று வரை இலையாக இருந்தவர்கள் இன்று களையாகத் தெரிகிறார்களா என சீமானிடம் காளியம்மாள் சீறியுள்ளார். நாதகவில் இருந்து விலகிய பிறகு முதல் முறையாகத் தனியார் நாளிதழுக்கு நேர்காணல் அளித்துள்ள அவர், பணம், பதவி, அந்தஸ்துக்காக நாதகவில் யாரும் சேரவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், களையென நினைத்து விளைந்த நல்ல பயிர்களைப் பிடுங்கிப் போட்டு விடக்கூடாது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.