News June 24, 2024
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை, எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைதுசெய்வது வாடிக்கையாகியுள்ளது. நேற்று ராமேஸ்வரத்திலிருந்து சென்ற 22 மீனவர்கள், 3 விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் இன்று முதல் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள்

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக 7 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ஆந்திர மாநிலம் காக்கிநாடா, மச்சிலிப்பட்டினம், நரசாப்பூரில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவுக்கு 4 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் தெலங்கானாவின் சார்லபள்ளியில் இருந்தும் அடுத்த 2 மாதங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் தமிழகம் வழியாக இயக்கப்படுகின்றன.
News November 17, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 522
▶குறள்:
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
▶பொருள்: எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.
News November 17, 2025
NATIONAL 360°: ஹைதராபாத்தில் பற்றி எரிந்த எலக்ட்ரிக் கார்

சூரத்தில் நடைபெற்று வரும் புல்லட் ரயில் ஸ்டேஷன் பணிகளை PM மோடி ஆய்வு செய்தார். டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஹைதராபாத்தில் அதிக வெப்பமடைந்ததால் எலக்ட்ரிக் காரில் பற்றி எரிந்து தீயை தீயணைப்புத்துறையினர் கட்டுப்படுத்தினர். டெல்லியில் ரயில் தண்டவாளத்துக்கு அருகே அரை நிர்வாணத்துடன் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


