News March 19, 2024
நல்ல நேரம் பார்த்து கையெழுத்து போட்ட ராமதாஸ்

பாஜக கூட்டணியில் பாமக கடந்த முறை 7 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், தற்போது கூடுதலாக 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தைலாபுரம் தோட்டத்திற்கு அண்ணாமலை 6 மணி வந்தார். ஆனால், காலை 7.30 மணி வரை நல்ல நேரம் இல்லை. இதனால், இருகட்சிகளின் தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிய நிலையில், சரியாக காலை 7.47 மணிக்கு நல்ல நேரத்தில் தொகுதி உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
Similar News
News September 14, 2025
பெற்றோர்களே, இதை கவனிங்க

பெற்றோர்களே இந்த விஷயங்களையும் கவனியுங்கள்: *குழந்தைக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், தட்டுகளில் உணவை கொடுத்து பழக்கவும் *தண்ணீர் பாட்டிலை ஸ்டீல் (அ) காப்பரில் வாங்கலாம். வாய் சிறிதான பாட்டில் நல்லது. *பணிக்கு செல்லும் பெற்றோர் ஞாயிறன்று முழு நேரத்தையும் குழந்தையுடன் செலவழியுங்கள் *வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது நல்லது; பாதுகாப்பும் கூட *பிடிக்காத விஷயத்தை செய்ய வற்புறுத்தாதீர்.
News September 14, 2025
நான்கு நாள்களுக்கு கனமழை பெய்யும் : IMD

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த சுழற்சி காரணமாக 16-ம் தேதி வேலூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், TV.மலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. 17-ம் தேதி 8 மாவட்டங்களிலும், 18-ம் தேதி 7 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று IMD கூறியுள்ளது. 19-ம் தேதி வரை கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 14, 2025
செப்டம்பர் 14: வரலாற்றில் இன்று

*1948 – ஆபரேஷன் போலோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்திய தரைப்படை அவுரங்காபாத் நகரைக் கைப்பற்றியது. *1954 – சோவியத் ஒன்றியம் அணு ஆயுத சோதனையை மேற்கொண்டது. *1974 – நடிகை பிரியா ராமன் பிறந்தநாள். *1997 – மத்திய பிரதேசத்தில் ரயில் ஒன்று ஆற்றில் விழுந்து 81 பேர் உயிரிழப்பு. *2005 – விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை ஆரம்பித்தார்.