News February 27, 2025
அமித் ஷாவுக்கு ராமதாஸ் அட்வைஸ்

எம்.பி. தொகுதிகளின் மறுவரையறை குறித்த அமித் ஷாவின் விளக்கத்தை ஏற்க முடியாது என ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தென் மாநிலங்களில் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் எல்லோர் மத்தயிலும் நிலவுகிறது. மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் தகவல்களை வெளியிடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். தொகுதிகளின் எண்ணிக்கையில் 7.20% தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News February 27, 2025
வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களாக ஆய்வு செய்து, 14 திருத்தங்களை மேற்கொள்ள பார்லி. கூட்டுக் குழு பரிந்துரை செய்தது. இந்த 14 திருத்தங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் மார்ச் 10ஆம் தேதி துவங்க உள்ள பட்ஜெட் தொடரின் 2ஆவது அமர்வில், இந்த திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 27, 2025
நாளை ஆஜராக முடியாது: போலீசுக்கு சீமான் சவால்

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில், ஆஜராக போலீஸ் சம்மன் ஒட்டிய நிலையில், நாளை வர முடியாது; என்ன செய்ய முடியும் என்று போலீசாருக்கு சீமான் சவால் விடுத்துள்ளார். நான் ஆஜராவேன் என உறுதியளித்த பின்னரும் காவல் துறைக்கு என்ன அவசரம் வந்தது. இந்த வழக்கில் என்னை மீண்டும் மீண்டும் விசாரித்து அசிங்கப்படுத்தவே முயற்சி நடக்கிறது. காவல் துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டு நான் பயப்பட மாட்டேன் என தெரிவித்தார்.
News February 27, 2025
ரீ–ரிலீஸாகும் ரவி மோகன் படங்கள்

ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரவி மோகன். தற்போது திரைத்துறையில் கால்பதித்து 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதனை கொண்டாடும் வகையில் அவர் நடித்த முதல் படமான ஜெயம், M.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படங்கள் விரைவில் ரீ–ரிலீஸ் ஆகவுள்ளன. இந்த திரைப்படங்கள் 4K டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தியேட்டர்களில் ரீ –ரிலீஸாகின்றன. இதனால் ரவியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.