News March 2, 2025

சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ரம்பா

image

நடிகை ரம்பா மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். இதற்காக புதிய கால்ஷீட் மேனேஜரையும் நியமித்துள்ளார். ஒரு நடிகையாக தனக்கு சவால் விடும் பாத்திரங்களை ஏற்று நடிக்க இதுதான் சரியான நேரம் எனவும், சினிமா எப்போதுமே தனது முதல் காதல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 3 குழந்தைகளுக்கு தாயான அவர், குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் மீண்டும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 13, 2026

IPL 2026: ரூல்ஸை மாற்றிய BCCI!

image

2026 IPL சீசனுக்கு முன்பாக, அணிகளின் பயிற்சிக்கு BCCI புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது *ஒரு அணி பயிற்சி செய்த ஆடுகளத்தில் மற்றோர் அணி பயிற்சி செய்யக் கூடாது *ஒவ்வொரு அணியும் தனி ஆடுகளத்தில்தான் பயிற்சி செய்ய வேண்டும் *அதிகபட்சமாக 2 பயிற்சி போட்டிகளை விளையாடலாம் *மின் விளக்குகள் மூன்றரை மணி நேரத்திற்கு மேல் யூஸ் பண்ணக்கூடாது *பயிற்சி ஆட்டத்தை பொறுத்தவரை உள்ளூர் அணிக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

News March 13, 2026

சட்டவிரோத பணப் பரிமாற்றம்.. ஏ.எம்.மூர்த்தி கைது

image

₹25 கோடி சட்ட விரோத பணப்பரிமாற்ற புகாரில், அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழக தலைவர் ஏ.எம்.மூர்த்தியை ED கைது செய்துள்ளது. கடந்த 2 நாள்களாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். வரும் தேர்தலில் இக்கட்சி திமுகவுக்கு ஆதரவளித்துள்ளது. சமீபத்தில் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் மூர்த்தி கலந்துகொண்டார்.

News March 13, 2026

BREAKING: தங்கம் விலை சரசரவென குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை 2-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 குறைந்து ₹1,19,200-க்கும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹14,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹1200, இன்று ₹560 என 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு மொத்தம் ₹1,760 குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமில்லை.

error: Content is protected !!