News October 3, 2025
ராமாயண வில்லன்கள் தற்போதும் உள்ளனர்: UP CM

ராமாயணம், மகாபாரதத்தின் வில்லன்கள் இன்றும் புதிய வடிவில் உள்ளதாக உ.பி., CM ஆதித்யநாத் கூறியுள்ளார். இன்றும் சூர்ப்பனகை, தடாகா போன்றோரை சமூகம் எதிர்கொள்வதாக தெரிவித்த அவர், அவர்களிடமிருந்து சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார். சாதி, தீண்டாமை என்ற பெயரில் சமூகத்தை பிரிப்பவர்கள் முந்தைய பிறவியில் சூர்ப்பனகையின் கூட்டாளிகளாக இருந்திருப்பர் என்றும் கூறினார்.
Similar News
News October 3, 2025
₹35,400 சம்பளம்: 2,570 பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,570 (மாறுதலுக்கு உட்பட்டது) ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: Diploma, B.E, B.Tech. வயது வரம்பு: 18 – 33. சம்பளம்: ₹35,400 முதல் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பம் அக்.30 தொடங்கி நவ.30 உடன் முடிவடைகிறது. இது குறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News October 3, 2025
தலித் அடக்குமுறையில் தமிழகம் மோசமான சாதனை: RN ரவி

RSS நாடு முழுவதும் பரவி, சமூகத்தின் அடிப்படையிலிருந்து தேசிய உணர்வையும் பெருமிதத்தையும் ஊட்டியுள்ளது என கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். அதேநேரம், தலித் சமூகத்திற்கு எதிரான அடக்குமுறையில், தமிழகம் மோசமான சாதனையை படைத்துள்ளதாக விமர்சித்துள்ளார். பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தை போன்று வேறு எங்கும் மோசமான அடக்குமுறைகள் நடைபெறவில்லை எனவும் கூறினார்.
News October 3, 2025
இன்னும் சற்றுநேரத்தில் விஜய் முக்கிய முடிவு

கரூர் துயர சம்பவத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் விவரங்கள் விஜய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கரூர் செல்ல பாதுகாப்பு அளிக்கக்கோரிய வழக்கு சற்றுநேரத்தில் ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வரவுள்ளது. இதில், கரூர் செல்லலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டால், இன்றே பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து முடிவெடுக்க சற்றுநேரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசிக்கவுள்ளார்.