News May 15, 2024
₹830 கோடி செலவில் ராமாயணம் முதல் பாகம்

ரன்பீர் கபூர் & சாய்பல்லவி நடிப்பில் உருவாகிவரும் ராமாயணம் படத்தின் முதல் பாகத்துக்கு ₹830 கோடி செலவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தின் தொழில் நுட்ப பணிகளுக்காக மட்டும் ஒரு ஆண்டை படக்குழு ஒதுக்க இருப்பதாக கூறப்படுகிறது. உலகளவில் ரசிகர்களை கவரும் நோக்கில் உயர்ந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுக்கின்றனர்.
Similar News
News November 15, 2025
அலுவலக ரொமான்ஸ்.. அசர வைக்கும் இந்தியா

YouGov உடன் இணைந்து Ashley Madison, உலகளவில் அலுவலக ரொமான்ஸ் அதிகமுள்ள நாடுகளை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நாம் நினைப்பதை விட அதிகமாகவே அலுவலக ரொமான்ஸ் இருக்கிறது. எந்த நாட்டில், எவ்வளவு சதவீதம், அலுவலக ரொமான்ஸ் நடைபெறுகிறது என்பதை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.
News November 15, 2025
விஜய்க்கு அரசியல் அட்வைஸ் கொடுத்த ரோஜா

விஜய் அரசியலில் சாதிக்க வேண்டும் என்றால், மக்களோடு மக்களுக்காக களப்பணியாற்ற வேண்டும் என ரோஜா தெரிவித்துள்ளார். தேர்தலை பொறுத்தவரை கடைசி 2 மாதங்கள்தான் முக்கியமானது. அப்போது யார் மக்களை கவர்கிறார்களோ அவர்கள்தான் பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள். பணம் கொடுத்தோ, உண்மை, பொய் என எதையாவது சொல்லியோ மக்களை கவர வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
பிஹாரில் CM ஸ்டாலின் பேரணி சென்ற தொகுதியின் ரிசல்ட்

ECI-ன் SIR-ஐ எதிர்த்து பிஹாரின் முசாபர்பூர் தொகுதியில், MGB கூட்டணி கட்சி தலைவர்களுடன் CM ஸ்டாலின் பேரணி சென்றார்.
அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பிரசாரமும் செய்தார். அந்த தொகுதியில் பாஜகவின் ரஞ்சன் குமார் 1,00,477 வாக்குகளையும், காங்கிரஸின் பிஜேந்திரா சௌத்ரி 67,820 வாக்குகளை பெற்றுள்ளனர். இறுதியில் 32,657 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.


