News October 9, 2025

உலகின் துயரத்தை போக்கவே ராமாயணம்: மோகன் பகவத்

image

உலகின் துயரத்தை போக்கவே வால்மீகி ராமாயணத்தை படைத்ததாக RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். பகவான் ராமர் எப்போதும் நம்முடன் இருந்தாலும், அவரை அனைவரது வீடுகளுக்கும், வாழ்க்கையிலும் கொண்டு சென்றது வால்மீகி தான் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த பாரம்பரியத்தை மனித குலம் பொறுப்புணர்வுடன் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 9, 2025

கரூர் துயரம்: சற்றுமுன் அதிரடியாக கைது

image

கரூர் துயர சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை சூடுபிடித்துள்ளது. சம்பவத்தின்போது ஆம்புலன்ஸை வழிமறித்து டிரைவரை தாக்கியதாக தவெக சேலம் மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் 2 நாள்கள் விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

News October 9, 2025

கிரிக்கெட் வாரியங்களின் சொத்து மதிப்பு.. நம்பர் 1 யார்?

image

கிரிக்கெட் தற்போது விளையாட்டு என்பதை தாண்டி, , மிகப்பெரிய வணிகமாக வளர்ந்துள்ளது. 2025-26-ம் ஆண்டில் கிரிக்கெட் வாரியங்களின் மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா? ஒவ்வொரு கிரிக்கெட் வாரியத்தின் மதிப்பை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்தியாவுக்கு அடுத்து, உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் அணி எது? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 9, 2025

விஜய்யை நெருக்குகிறார்கள்: முத்தரசன்

image

தவெகவிற்கு வருவது பார்க்க வரும் கூட்டமே தவிர, கேட்க வரும் கூட்டம் அல்ல என்று CPI மூத்த தலைவர் முத்தரசன் விமர்சித்துள்ளார். கரூர் துயர சம்பவத்தை வைத்து விஜய்யை அதிகமாக நெருக்குவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணிக்கு பிள்ளையார்சுழி போடப்பட்டு விட்டதாக தவெக கொடியை பார்த்து EPS பேசியது பற்றிய கேள்விக்கு, EPS ஆசைப்படலாம், ஆனால் பேராசைப்படக் கூடாது என்று பதிலளித்துள்ளார்.

error: Content is protected !!