News March 17, 2024
மரநிழலில் அமர்ந்து மனுக்கள் பெற்ற இராமநாதபுரம் கலெக்டர்

நேற்று இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் புதுப்பட்டிணம் ஊராட்சிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார். மரத்தடிநிழலில் தரையில் அமர்ந்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றும்
கனிவாக பேசியும் குறைகளை கேட்டறிந்த ஆட்சியரை இப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்
Similar News
News April 4, 2025
ராமநாதபுரம் மக்களே தயாரா… சென்னைக்கு புதிய ரயில்

சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு இரண்டு தினசரி ரயில் சேவைகள் இயங்குகிறது. இந்நிலையில் மூன்றாவதாக சென்னைக்கு ஒரு புதிய இரவு ரயில் சேவை அறிமுகமாகிறது. பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்த வண்டி எண்: 16103/16104 தாம்பரம்-ராமேஸ்வரம் சேவையை இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது. இன்று இந்த வண்டிக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. மக்களே உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த தகவலை SHARE செய்து உதவுங்க.
News April 4, 2025
பாம்பன் பாலம் திறப்பு விழா அழைப்பிதழ்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பாம்பன் இணைப்பு இரயில்வே பாலம் ஏப்ரல் 6 ஆம் தேதி இந்திய பிரதமர் மோடி திறக்க உள்ளார். அதன் அழைப்பிதழ் போக்குவரத்து அமைச்சகத்தால வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.உங்க ஊர் பெருமையா நீங்கதான் சொல்லணும். #SHARE ALL
News April 3, 2025
ராமநாதபுரம்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்

இன்று (ஏப்ரல். 03) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.