News March 17, 2024
இராமநாதபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-யையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தன. இதன் காரணமாக, ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கிராமப் பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நடைபெறாது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News October 25, 2025
ராமநாதபுரம்: VOTERIDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

ராமநாதபுரம் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கங்க .
1.<
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News October 25, 2025
பரமக்குடியில் காரில் இறந்து கிடந்த டிரைவர்

பரமக்குடி பாண்டியன் தெருவை சேர்ந்தவர் பலராமன் 51. இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து ராமநாதபுரத்தில் உள்ளார்.பலராமன் வாடகை கார் டிரைவராக பணிபுரிகிறார். இரவு வைகை ஆற்றில் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர், காரிலேயே இரவில் தூங்கியுள்ளார். இச்சூழலில் நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பலராமன் இறந்த கிடப்பது குறித்து போலீசாருக்கு தெரிவித்தனர்.
News October 25, 2025
பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் புதிய வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்புல்லாணி ஊராட்சி, குதக்கோட்டையில் 2023–2024 ஆண்டு ஒதுக்கீட்டில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டு வருகிறது. 100 வீடுகளுக்கு பயனாளிகள், தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். (நவ, 5) மாலை 5 மணிக்குள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டாரவளர்ச்சி அலுவலரிடம் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.


