News April 10, 2025

நிர்வாகிகளுடன் ராமதாஸ், தொண்டர்களுடன் அன்புமணி

image

பாமகவின் தலைவராக இனி இருப்பேன் என்று ராமதாஸ் அறிவித்ததை தொடர்ந்து, கட்சித் தொண்டர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, ஜி.கே.மணி, மூர்த்தி, பாமக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் ராமதாஸை சந்தித்து பேச இருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அன்புமணியை அவரின் ஆதாரவாளர்கள் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News December 13, 2025

திருச்சி: டிகிரி போதும்..! வங்கியில் வேலை!

image

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

News December 13, 2025

FLASH: தங்கம் விலையில் மாற்றமில்லை

image

ஜெட் வேகத்தில் உயர்ந்து நேற்று வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை இன்று(டிச.13) மாற்றமின்றி கிராம் ₹12,370-க்கும், சவரன் ₹98,960-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த தங்கம், இன்று மந்த நிலையில் இருப்பதே விலை மாறாததற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், இன்று தங்கம் வாங்க நினைத்தவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

News December 13, 2025

திமுக, அரசு மீது விமர்சனங்கள் உண்டு: திருமாவளவன்

image

கட்சி தொடங்கிய உடன் சிலர் CM கனவு காண்பதாக விஜய்யை திருமாவளவன் மறைமுகமாக சாடியுள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், திமுக மீதும், அரசு மீதும் எங்களுக்கு விமர்சனங்கள் உள்ளது. ஆனால், வலதுசாரிகளுக்கு இங்கே சிவப்புக் கம்பளம் விரிக்க முடியாது எனவும், இடைக்கால தேவைக்காக அணி மாறிவிட முடியாது என்றும் கூட்டணி குறித்தான மறைமுக விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!