News September 10, 2025
ஆக்ஷனில் இறங்கிய ராமதாஸ்; அன்புமணிக்கு செக்

பாமகவிலிருந்து அன்புமணியை தற்காலிகமாக நீக்கும் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி நடந்தால் கட்சி, சின்னத்துக்கு அன்புமணி உரிமை கோர வாய்ப்புள்ளது என்பதற்காக முன்கூட்டியே ராமதாஸ் தரப்பு சென்னை HC & உரிமையியல் கோர்ட்டில் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது. கட்சி, சின்னத்துக்கு அன்புமணி உரிமை கோரினால் தங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News September 10, 2025
ITI போதும்! மத்திய அரசில் 440 காலியிடங்கள்!

மத்திய அரசின் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 440 Operator-களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ITI முடித்த 18- 29 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வின் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும். வரும் 12-ம் தேதி வரை மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். தேர்ச்சி பெறுவோருக்கு மாத சம்பளமாக ₹16,900 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News September 10, 2025
ராணுவ ஆட்சி என்றால் என்ன?

நேபாளத்தில் தற்போது ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. ராணுவ ஆட்சி என்றால் என்ன தெரியுமா? நாட்டில் அரசியல் குழப்பம், உள்நாட்டு போர் போன்ற சூழல்களில் நிலைமை கைமீறிப் போனால், ராணுவம் ஆட்சியை கைப்பற்றும் நிலையே ராணுவ ஆட்சியாகும். சட்டம், நீதி, நிர்வாகம் அனைத்துமே ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும். ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சியாக மாறும் ஆபத்து இதில் உண்டு. இந்தியாவில் இப்படி ஏற்படாது. ஏன் தெரியுமா?
News September 10, 2025
நடிகை நயன்தாராவுக்கு அதிர்ச்சி

நயன்தாராவின் ஆவணப்பட சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. NRD பட காட்சியை பயன்படுத்தியதாக, தனுஷ் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது, சந்திரமுகி பட காட்சியை பயன்படுத்தியதாக, ₹5 கோடி கேட்டு AP இண்டர்நேஷனல் நிறுவனம் ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளது. இதற்கு, அக்.6-க்குள் பதிலளிக்குமாறு ஆவணப்படம் தயாரித்த டார்க் ஸ்டூடியோவுக்கு கோர்ட் உத்தரவிட்டிருப்பது நயன்தாரா தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.