News December 29, 2024
முகுந்தன் நியமனத்தில் ராமதாஸ் உறுதி

பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணியை சமாதானப்படுத்தும் முயற்சி தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது. அதன் பின்னர், முகுந்தன் தொடர்பாக எந்தக் கருத்தையும் அன்புமணி தெரிவிக்கவில்லை. தனது பேரனுக்கு கட்சியில் பதவி கொடுப்பதில் ராமதாஸ் பிடிவாதமாக இருப்பதாக தெரிகிறது. இதனால்தான் முகுந்தன் நியமனத்தில் இதுவரை எந்த மாற்று அறிவிப்பும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
Similar News
News July 10, 2025
தொடர் அலட்சியத்தால் நேர்ந்த பெருந்துயரம்..!

கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேலை நேரத்தில் பலமுறை தூங்கியதும், நல்வாய்ப்பாக பலமுறை விபத்து தவிர்க்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பங்கஜின் அலட்சியத்தால் பிஞ்சுகள் உதிர்ந்து போனது பெரும் வேதனை.
News July 10, 2025
போலீஸ் ஸ்டேஷன் மரணங்கள்: விஜய் பலே திட்டம்

சமீபத்தில் லாக்-அப் டெத்தில் உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய், அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவியும் செய்தார். இந்நிலையில், கடந்த நான்காண்டு கால திமுக ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 தேர்தல் களம் 4 முனைப்போட்டியாக உள்ள நிலையில், தவெகவின் நகர்வுகள் வேகமெடுக்கிறது.
News July 10, 2025
போர் தொழில் பழகும் தனுஷ்!

‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் ‘D54’ படத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. நிலப்பரப்பு ஒன்று எரிந்துக் கொண்டிருக்க, தனுஷ் வருத்தத்துடன் நிற்கும் படியான போஸ்டருக்கு ‘Sometimes staying dangerous is the only way to stay alive’ என கேப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.