News June 17, 2024
மத்திய அமைச்சர் கருத்துக்கு ராமதாஸ் கண்டனம்

தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மேகதாது திட்டம் தொடங்கப்படும் என்ற இணை அமைச்சர் சோமண்ணா கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் நீதியின் பக்கம் நிற்காமல், கர்நாடகாவுக்கு ஆதரவாக அமைச்சர் பேசுவது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார். கர்நாடக பாஜக தலைவரான சோமண்ணா அமைச்சராக நியமிக்கப்பட்ட போதே தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
Similar News
News March 14, 2026
மனித உடலில் தங்கம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

நம் ஒவ்வொருவரது உடலிலும் தங்கம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இது கேட்பதற்கு விசித்திரமாக தோன்றலாம்; ஆனால் அது உண்மையே. 70 கிலோ எடையுள்ள ஒரு மனித உடலில் சுமார் 0.2 மி.கி தங்கம் உள்ளது. இது ஏறக்குறைய 5 லிட்டர் ரத்தத்தில் மிக சிறிய அளவில் கரைந்துள்ளதால், இதனை தனியாக பிரிக்க முடியாது. இது மூட்டு ஆரோக்கியத்திற்கும், உடலில் ஏற்படும் மின் சமிக்ஞைகளுக்கு பெரும் துணைபுரிவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
News March 14, 2026
குற்றச் சமூகமாக மாறிவிட்டோம்: சீமான்

TN-ல் 6 வயது சிறுமி முதல் 60 வயது மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை என சீமான் வேதனை தெரிவித்துள்ளார். திருச்சியில் பேசிய அவர், குற்றச் சமூகமாக மாறிவிட்டோம் எனவும், போதை தலைவிரித்தாடுவதே குற்றச் சம்பவங்களுக்கு காரணம் என்றும் கூறினார். குற்றச் சம்பவங்களில் ஆட்சியில் இருப்பவர்கள் மட்டுமல்ல, அதைத் தேர்வு செய்த மக்களுக்கும் பங்கு உள்ளதாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
News March 14, 2026
OPS அணியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவி!

OPS அணியிலிருந்து மீண்டும் அதிமுகவுக்கு திரும்பியவர்களுக்கு, EPS முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார். அந்த வகையில், ராஜ்யசபா MP தர்மர் மற்றும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இருவருக்கும் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், நேற்று அதிமுகவில் இணைந்த காளியம்மாளுக்கு மகளிர் அணியில் மாநில பொறுப்பு மற்றும் செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


