News September 11, 2025

ராமதாஸ் அறிவிப்பு பாமகவை கட்டுப்படுத்தாது: கே.பாலு

image

அன்புமணியை நீக்கும் அதிகாரம் ராமதாசுக்கு இல்லை என கே.பாலு தெரிவித்துள்ளார். பாமக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மட்டுமே நிர்வாக பணிகளை மேற்கொள்ள முடியும் என கூறிய அவர், ராமதாஸ் அறிவிப்பு பாமகவை கட்டுப்படுத்தாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், அன்புமணிதான் பாமக தலைவர் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அவருக்குதான் அதிகாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News September 11, 2025

இதவிட எனக்கு முக்கியமான வேலை இருக்கு: அன்புமணி

image

கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக கூறி, பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து அன்புமணியிடம் கேட்டதற்கு, ‘இதைவிட எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது’ என பதிலளித்துள்ளார். மேலும், வழக்கறிஞர் பாலு விரிவாக இது பற்றி விரிவாக பேசுவார் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், பாமக விதிகளின் படி நிறுவனரான ராமதாஸின் அறிவிப்பு செல்லாது என பாலு கூறியுள்ளார்.

News September 11, 2025

இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர வேண்டாம்: அரசு வார்னிங்

image

இந்தியர்கள் மீண்டும் ரஷ்ய ராணுவத்தில் சேர்வதாக தகவல்கள் வெளியான நிலையில், இது மிக ஆபத்தானது என இந்திய அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளுடன் பேசிவருவதாகவும், உடனே இந்தியர்களை விடுவிக்க கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, ரஷ்யாவில் அதிக சம்பளத்தில் வேலை என கூறி ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் சேர்க்கப்பட்டனர். இந்திய அரசின் முயற்சியால் அவர்களில் 98 பேர் மீட்கப்பட்டனர்.

News September 11, 2025

இமானுவேல் சேகரனாருக்கு மரியாதை செலுத்திய விஜய்

image

இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி, அவரின் புகைப்படத்திற்கு <<17678373>>விஜய் <<>>மரியாதை செலுத்தினார். இதுதொடர்பான போட்டோவை x பக்கத்தில் வெளியிட்ட அவர், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காக களமாடியவர் இமானுவேல் சேகரன். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை என்று பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!