News March 1, 2025
நாளை தொடங்குகிறது ரம்ஜான் நோன்பு

இந்த ஆண்டுக்கான ரம்ஜான் முதல் பிறை நாளை (02.03.2025) நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். நேற்றைய தினமான வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பிறை தென்படவில்லை. ஆகையால், இஸ்லாமிய பெருமக்கள் நாளை முதல் 30 நாள்கள் நோன்பிருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடவுள்ளனர். ஷரியத் முறைப்படி இந்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக ஹாஜி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2025
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 2025-26ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ராயப்பேட்டை அரசுப் பள்ளியில் மாணவச் சேர்க்கையை தொடங்கிய அவர், தனது பிறந்தநாளையும் அங்குள்ள மாணவர்களுடன் கொண்டாடினார். பள்ளிகளில் புதிதாக சேர வந்த மாணவர்களுக்கு மலர் மாலைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கி முதல்வர் குதூகலித்தார்.
News March 1, 2025
முதல்வர் ஸ்டாலினை வாழ்த்திய பிரதமர் மோடி

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டுகிறேன்” என தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அரசியல் களத்தில் பிரதமரும், முதல்வரும் இருவேறு துருவங்களாக இருந்தாலும், முதல்வருக்கு, பிரதமர் மோடி வாழ்த்துக் கூறியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
News March 1, 2025
ரயில்வேயில் 32,438 காலியிடங்கள்: இன்றே கடைசி

ரயில்வேயில் 32,438 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.1) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயதாக 18ம், அதிகபட்ச வயதாக 36ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேலையில் சேர விரும்புவோர், ரயில்வே ஆள்தேர்வு <