News April 14, 2024
பாஜக தேர்தல் வாக்குறுதியில் ராமர்…

அயோத்தியில் குழந்தை ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றதை நினைவுகூரும் வகையில் உலகம் முழுவதும் ராமாயண உற்சவ விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளதாக பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ராமாயணம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கொண்டாடப்படுகிறது. அதனால், ராமரின் வரலாறை உலகம் முழுவதும் ஆவணப்படுத்துவோம் என பாஜக வாக்குறுதியாகத் தெரிவித்துள்ளது.
Similar News
News November 29, 2025
பாலய்யாவுக்கு பதில் விஜய் சேதுபதியா?

‘ஜெயிலர் 2’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. அதேநேரம், இப்படத்தில் பாலய்யா கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், பாலய்யா படத்தில் இருந்து விலகியதாகவும், அந்த ரோலில் தான் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஷூட்டிங் 2026, பிப்ரவரியில் முடிவடைந்து, சம்மரில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாரெல்லாம் வெயிட்டிங்?
News November 29, 2025
அரிஸ்டாட்டில் பொன்மொழிகள்

*தன் எதிரிகளை வெல்பவனை விட, தன் ஆசைகளை வெல்பவனே தைரியமானவன் என்று நான் எண்ணுகிறேன்.
*அமைதி, போரை விட மிகவும் கடினமானது.
*உங்கள் மகிழ்ச்சி உங்களை மட்டுமே சார்ந்துள்ளது.
*இயற்கை, ஒரு நோக்கம் இல்லாமல் எதையுமே உருவாக்காது.
*கல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் அதன் பழங்கள் இனிப்பானவை. *உடலை குணப்படுத்துவதற்கு முன், முதலில் மனதை குணப்படுத்த வேண்டும்.
News November 29, 2025
நக்சலிஸம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்: அமித்ஷா

60-வது டிஜிபிக்கள், ஐஜிக்கள் மாநாடு, ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில் பேசிய அமித்ஷா, அடுத்த மாநாட்டுக்குள் இந்தியாவில் நக்சலிஸம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என சூளுரைத்துள்ளார். நக்சலிஸத்தை முற்றிலும் ஒழிக்க, பாஜக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார். நக்ஸலிசத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 2014-ல் 126ஆக இருந்த நிலையில், தற்போது ]11 ஆக குறைந்துள்ளது என்றார்.


