News October 24, 2025
அழகின் தீயில் வாட்டும் ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரகுல் ப்ரீத் சிங் திருமணத்துக்கு பின் பெரிதாக படங்களில் தலை காட்டவில்லை. ஆனாலும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என கவர்ச்சியில் ஆளை சாய்க்கும் போட்டோஸை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங் அழகில் மயங்கிய இளசுகள் ஹார்ட்டின்களை பறக்கவிடுகின்றனர். அவரது அழகை ஆராதிக்க மேலே உள்ள போட்டோஸை SWIPE செய்து பாருங்கள்.
Similar News
News October 24, 2025
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுதா? இதோ Solution

முடி கொட்டுது என்பதற்காகவே ஹெல்மெட் அணியாமல் பலர் பைக் ஓட்டுறாங்க. ஆனால் இவ்வளவு ரிஸ்க் எடுத்து உயிரை பணயம் வைத்து முடியை காப்பாற்றுவதால் என்ன பயன்? ஹெல்மெட் அணிந்தாலும் முடி கொட்டாமல் இருக்க சில Tips இருக்கு. ➤ஹெல்மெட்டின் உள்பகுதியை சுத்தம் செய்யுங்கள் ➤காட்டன் துணியை போட்ட பிறகு ஹெல்மெட்டை அணியுங்கள் ➤காற்றோட்டமான ஹெல்மெட்டை தேர்ந்தெடுங்கள் ➤ ஈரமான முடியில் ஹெல்மெட் அணிய வேண்டாம். SHARE.
News October 24, 2025
யார் வாக்குகளை பிரிக்கிறார் பிரசாந்த் கிஷோர்?

பிஹாரின் அடுத்த CM யார் என்பதை பிரசாந்த் கிஷோர் பெறும் வாக்குகள் தீர்மானிக்க உள்ளன. சமீபத்திய சர்வேயின் படி, 57% இளைஞர்கள் நிதிஷ் ஆட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். PK இல்லாவிட்டால் இந்த வாக்குகள் பெரும்பாலும் தேஜஸ்விக்கே செல்லும். ஜெகநாத் மிஸ்ராவுக்கு பிறகு 35 ஆண்டுகளாக உயர்சாதி CM இல்லாத விரக்தியில் இருக்கும் Brahmins & Upper castes, PK பக்கம் திரும்பினால் அது NDA வெற்றியை பாதிக்கும்.
News October 24, 2025
விஜய் இப்படி செய்தால் தற்கொலைக்கு சமம்: டிடிவி

EPS-ன் தலைமையை விஜய் ஏற்றுக்கொண்டால், அது தற்கொலைக்கு சமம் என டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார். தொண்டர்களை உற்சாகப்படுத்தவே EPS கூட்டணி குறித்து ஏதேதோ கூறி வருகிறார் எனவும், அவர் செய்த துரோகத்துக்கு அவர் நிச்சயம் தேர்தலில் வீழ்த்தப்படுவார் என்றும் கூறியுள்ளார். மேலும், கூவி கூவி அழைக்கும் கல்லாப்பெட்டி பழனிசாமியை தோளில் தூக்கி வைத்துக்கொள்ள விஜய் வருவாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


